» 

மாமியாராக நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா-ரஜினி

Posted by:
 

மாப்பிள்ளை படத்தில் எனக்கு மாமியாராக நடிக்க மறுத்துவிட்டார் வைஜெயந்திமாலா என்றார் ரஜினிகாந்த்.

ரஜினியின் மனைவி லதா ரஜினி நடத்தும் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.

விழாவில் நடிகை சௌகார் ஜானகி, கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர்.எம்.பாலமுரளிகிருஷ்ணா, சித்ராலயா கோபு ஆகியோருக்கு பீஷ்ம விருதுகளும், இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மற்றும் வைஜயந்தி மாலா ஆகியோருக்கு ஆகியோருக்கு வாழ்நாள் நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன. விருதுகளை ரஜினிகாந்த் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய தேவ் ஆனந்த், "ரஜினி உயர்ந்த குணங்களுடன் உயர்ந்த இடத்தில் இருக்கும் றுபத கலைஞர். அவருடனான நட்பு எனக்குப் பெருமை அளிக்கிறது. மிக நல்ல முன்மாதிரியாகத் திகழும் மனிதர் அவர்" என்றார்.

நடிகை சௌகார் ஜானகி பேசுகையில், "எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளுடன் நடித்த நாட்கள் என் நினைவுக்கு வருகின்றன. ரஜினிகாந்த் என்ற நல்ல மனிதருக்கு தாயாக நான் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

நான் மதிக்கும் கலைஞர்களில் மிக முக்கியமானவர் தேவ் ஆனந்த். அவரது இந்த இளமையின் ரகசியம்தான் தெரியவில்லை. உற்சாகத்தின் உருவம் அவர்.

இந்த இடத்தில் வைஜெயந்திமாலா பாலி பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். மிகச் சிறந்த நடிகை அவர்.

மாப்பிள்ளை படத்தில் எனக்கு மாமியாராக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் வைஜெயந்தி மாலாதான். அதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நண்பர் சிரஞ்சீவி ஒரு பெரும் தொகையை வைஜெயந்திமாலாவுக்கு கொடுக்க முன்வந்தார்.

ஆனால் வைஜெயந்திமாலா நடிக்க மறுத்துவிட்டார். 'உங்களுக்கு எதிராக நடிக்க என்னால் முடியாது. உங்களுடன் நான் மோதுவது போன்ற காட்சிக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன்' என்றார்.

இப்படிப்பட்ட உயர்ந்த கலைஞர்களைச் சிறப்பிப்பதில் எனக்குப் பெருமை" என்றார்.

லதா ரஜினிகாந்த் வரவேற்றுப் பேசினார். திரையுலகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Read more about: ஆண்டுவிழா, ஆஷ்ரம் பள்ளி, தேவ் ஆனந்த், ரஜினி, லதா ரஜினி, வைஜெயந்திமாலா, dev anand, latha rajini, maappillai, rajini, vayjayanthimala

Tamil Photos

Go to : More Photos