»   »  60வது படம்: நான்கு வில்லன்களோடு மோதும் விஜய்!

60வது படம்: நான்கு வில்லன்களோடு மோதும் விஜய்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'விஜய் 60' படத்தில் விஜய்க்கு வில்லனாக 4 பேரை இயக்குநர் பரதன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

'தெறி' படத்துக்குப்பின் 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார்.

'ரஜினிமுருகன்' புகழ் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

விஜய் 60

அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 59 வது படமாக வெளியான 'தெறி' கடந்த மாதம் வெளியாகி திரையரங்குகளில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. தெறியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஸ்ரீமன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு

முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 10 ம் தேதி தொடங்கி 2 நாட்கள் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் ஓபனிங் பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர். விஜய் நடிப்பில் உருவாகும் இப்பாடலுக்கு தினேஷ் நடனம் அமைக்கிறார் மேலும் 26 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

4 வில்லன்கள்

டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு என 2 வில்லன்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தற்போது 4 வில்லன்களுடன் விஜய் மோதுவது உறுதியாகியுள்ளது. ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா என மேலும் 2 வில்லன்களை பரதன் புதிதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதனால் படத்தில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பது உறுதியாகியுள்ளது.

தீபாவளி

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு 'மைனா' சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 'அழகிய தமிழ் மகன்' தோல்விப்படமாக அமைந்தாலும் தன்னுடைய 60 வது படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய், பரதனுக்கு கொடுத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் விஜய் 60 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vijay- Keerthy Suresh's Vijay 60 Shooting Begins Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos