»   »  எனக்கும் என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழ வைத்துத் தான் பழக்கம்- விஜய்

எனக்கும் என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழ வைத்துத் தான் பழக்கம்- விஜய்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 6 மணியளவில் மகாபலிபுரம் அருகே அரங்குகள் அமைத்து நடைபெற்றது.

நடிகை சுருதிஹாசனின் பாடல், நடனக் கலைஞர்களின் நடனம் மற்றும் டி.ராஜேந்தரின் பேச்சு ஆகியவற்றால் விழா களைகட்டியது. விழாவில் புலி படத்தின் இசைத்தட்டை விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் வழங்க, விஜயின் மனைவி சங்கீதா பெற்றுக் கொண்டார்.


புலி இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார், அவற்றை இங்கு பார்க்கலாம்.


நீண்ட நாள் ஆசை

ஒரு ராஜா காலத்து கதையில் கமர்ஷியல் மாறாமல் ஒரு கதை பண்ண வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது. சிம்புதேவன் சொன்ன கதை பிடித்துப் போனதும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்ததுபோலவே படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.


சினிமாவில் மதிப்பெண் நிறைய பேர் வழங்குகிறார்கள்

பொது வாழ்க்கையில் பரீட்சை எழுதுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள், ஆனால் மார்க் போடுவது சில பேர்தான். ஆனால், சினிமாவில் பரீட்சை எழுதுவது சில பேர்தான். மார்க் போடுவதற்குத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் பரீட்சை எழுதியிருக்கிறோம். நீங்கள் தான் தகுந்த மார்க் போடவேண்டும்.


எப்போதுமே நம்பர் 1 வைரமுத்துதான்

சினிமாவில் ஹீரோக்களுக்கு எப்போதுமே நம்பர் 1, நம்பர் 2 என ஏற்றங்கள் இறக்கங்கள் வரும். ஆனால், சினிமாவில் எப்போதுமே நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் கவிஞர் வைரமுத்துதான்.


தியேட்டரில் சென்று பாருங்கள்

இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள். அதுதான், கஷ்டப்பட்டு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் செய்த பேருதவியாக இருக்கும்.


தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன்

நிறைய தோல்விகளால் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும், நிறைய அவமானங்கள் இருக்கிறது.


மற்றவர்களை வாழ வைத்துத்தான் பழக்கம்

அடுத்த நிமிஷம் என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வைத்துதான் பழக்கம். எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். ஆனால், பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது.


குட்டிக் கதைகள்

பேச்சின் இறுதியில் சில குட்டிக் கதைகளையும் சொல்லி ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தார் விஜய்.


புலி இசை வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.....


 


English summary
Vijay Speech at Puli Audio Launch.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos