»   »  பிறந்த நாள் பார்ட்டியில் கெட்ட ஆட்டம் போட்ட விஜய் சேதுபதி...வீடியோ உங்களுக்காக

பிறந்த நாள் பார்ட்டியில் கெட்ட ஆட்டம் போட்ட விஜய் சேதுபதி...வீடியோ உங்களுக்காக

Posted by:
Subscribe to Oneindia Tamil

தேனி: நடிகர் அருள் தாஸின் பிறந்த நாள் விழாவில் விஜய் சேதுபதி நிஜமாகப் போட்ட ஆட்டம் தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தின் படப்படிப்பு தேனி வட்டாரப் பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவ்தா நாயர், ராதிகா சரத்குமார் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Thanks to all 󾌵󾌵󾍛🏻Celebrated Birthday at #Dharmadurai spot 󾌵

Posted by Arul Dass onTuesday, December 22, 2015

இந்நிலையில் நேற்று நடிகர் அருள் தாஸின் பிறந்தநாளை படப்பிடிப்புத் தளத்திலேயே கொண்டாடி இருக்கின்றனர். ஒரு பாடல் காட்சிக்காக வந்திருந்த பறைக் கலைஞர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பறையை இசைக்க, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் விஜய் சேதுபதி ஆடத் தொடங்கி விட்டார்.

Semma kuthuu!! Actor Arul Dass birthday celebration!! ;) #Vijaysethupathy #DharmaduraiSpot

Posted by Kiruba Murugesh onTuesday, December 22, 2015

விஜய் சேதுபதியின் இந்த ஆட்டத்தில் அருள் தாஸ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரும் கலந்து கொள்ள அந்த இடமே களை கட்டி விட்டது.

வெறும் ஆட்டம் போட்டதோடு நிறுத்தாமல் அருள் தாஸை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து, அவரது கன்னத்தில் முத்தமொன்றையும் அளித்து மகிழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் ஆட்டத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட,தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது விஜய் சேதுபதியின் நடனம்!

English summary
Yesterday Dharma Durai Crew Members Celebrated Actor Arul Dass birthday. This Birthday Party Vijay Sethupathi Real Dance now Goes viral on Websites.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos