»   »  விஜய் 60... "கபாலி" புகழ் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் விஜய்... தெறிக்கவிடத் தயாராகும் ரசிகர்கள்!

விஜய் 60... "கபாலி" புகழ் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் விஜய்... தெறிக்கவிடத் தயாராகும் ரசிகர்கள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நெருப்புடா.. கபாலிடா.. பரபரப்பு இப்போதைக்கு ஓயாது.. ஒட்டுமொத்த திரையுலகையும் கபாலி விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நிற்கிறார். அந்த விஸ்வரூபத்தை லைட்டாக ஒதுக்கி விட்டு விஜய் குறித்த ஒரு செய்தியை இப்போது பார்க்கலாம்.

இந்தப் படத்துக்கும் கபாலி படத்துக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. ஆம், கபாலி படத்திற்கு நெருப்புத்தனமாக இசையமைத்த சந்தோஷ் நாராயணன்தான் விஜயின் இந்த 60வது படத்துக்கும் இசையமைக்கிறார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என அசத்தி வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது விஜய்யிடம் வந்து நிற்கிறார். எப்படி ரஜினிக்காக அசத்தலாக நெருப்புடா என்று சொன்னாரோ அதேபோல விஜய்க்கும் ஒரு சூப்பர் மேட்டரை வைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

எதிர்பார்ப்பு...

விஜய் படத்துக்கு இதுவரை சந்தோஷ் இசையமைத்ததில்லை. இதுதான் முதல் முறை. இதனாலேயே பல விஜய் ரசிகர்கள், கபாலி இசையை ஊன்றிக் கவனித்தனர். காரணம், சூப்பர் ஸ்டாருக்கு சந்தோஷ் இசை செட் ஆகி விட்டால் வருங்கால சூப்பர் ஸ்டாருக்கும் சூப்பராக பொருந்தி வரும் என்ற எதிர்பார்ப்புதானாம்.

பாடகராகவும்...

சமீப காலமாக விஜய்யின் படங்களில் பாடல்களும் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளன. குறிப்பாக அவரே இப்போது மீண்டும் தனது படங்களில் ஒரு பாடல் பாட ஆரம்பித்து விட்டார்.

60வது படத்திலும்...

கூகுள் கூகுள் பாடலில் ஆரம்பித்து தொடர்ந்து தலைவா, கத்தி, ஜில்லா, புலி, தெறி என தெறிக்க விட்டு வருகிறார் விஜய். இதனால் ரசிகர்களுக்கு அவரது 60வது படத்திலும் தங்களது தலைவா பாடியுள்ள பாடலை அறிய செம ஆர்வமாக உள்ளதாம்.

டூயட் பாடல்...

இந்த நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் பரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 60வது படத்திலும் சந்தோஷ் இசையில் ஒரு பாடல் பாடுகிறாராம். விரைவில் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். கீர்த்தி சுரேஷுடன் இணைந்து தோன்றும் பாடல் காட்சியாம் இது.

ரசிகர்கள் ஆவல்...

இந்தப் பாடலின் முதல் வரி மட்டும் தெரிந்தால் போதும் தெறிக்க விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் விஜய் ரசிகர்களும் பெரும் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.

English summary
The latest update is that Vijay is all set to sing for Santhosh Narayanan making it the first time that Vijay is crooning for the composer.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos