twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வரும் காலம் நமக்கே'... நெல்லையில் விஜய் பார்த்த அரசியல் முன்னோட்டம்!

    By Shankar
    |

    மூன்று ஆண்டுகள் அமைதியாக இருந்த நடிகர் விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு நெல்லையில் நடந்த கத்தி விழாவில் வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்.

    டிசம்பர் 14-ம் தேதி நெல்லையில் நடந்தது கத்தி 50வது நாள் விழா மட்டுமல்ல, அரசியல் பிரவேசம் எப்போது, யாருடன் கூட்டணி என்பது வரை கலந்தாலோசிக்கப்பட்ட அரசியல் விழாவும்தான்.

    Vijay tested his fans pulse for entering politics

    வழக்கமா இந்த மாதிரி விழாக்களை அந்தந்த பகுதி ரசிகர் மன்றத்தினரை வைத்து செய்யச் சொல்வதுதான் விஜய் தரப்பின் வழக்கமாம். ஆனால் இந்த முறை, தன் சார்பாக ரசிகர் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் முன்கூட்டியே நெல்லைக்கு வந்து, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட விஜய் மன்ற பொறுப்பாளர்களை அழைத்து பெரும் கூட்டம் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டாராம்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து விஜய் இறங்கியதுமே, மன்ற நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து நலம் விசாரித்து படமெடுத்துக் கொண்ட விஜய், நெல்லைக்குப் போனதும் செய்த விஷயம்தான் அவரது அரசியல் நடவடிக்கைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

    வாகைக்குளம் அருகில் உள்ள சத்யா ரிசார்ட்டில் தங்கிய விஜய், படமெடுத்துக் கொள்ள வந்த ரசிகர்களுடன் போஸ் கொடுத்துவிட்டு, மாநிலம் முழுவதுமிருந்து முன் கூட்டியே வந்திருந்த 32 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோ சனை நடத்தினார். நிறைவாக, "இங்கு என்ன நடந்தது என யாருக்கும் இப்போது தெரியக்கூடாது'' என கண்டிப்பாகக் கூறி அனுப்பியுள்ளார்.

    வந்திருந்த நிர்வாகிகளிடம் பெயர், மாவட்டம்னு முதலிலேயே அச்சிடப்பட்ட ஒரு படிவத்தைக் கொடுத்துள்ளனர்.

    அதில் மக்கள் இயக்கமாக இருந்து தனியாக அரசியல் களத்தில் இருப்பதா?

    தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் களத்தைச் சந்திப்பதா?

    தேசியக் கட்சி என்றால் உங்களது சாய்ஸ்?-னு மூன்று கேள்விகளை அச்சடித்துள்ளனர்.

    பெரும்பாலான நிர்வாகிகள் பாஜவுடன் கூட்டணி அமைத்து இயங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்களாம்.

    பின்னர் அனைவரையும் மீண்டும் அழைத்த விஜய், உங்கள் கருத்துக்கு நன்றி. நானும் ஒரு முடிவில்தான் இருக்கிறேன். பின்னர் சொல்கிறேன், என்று கூறியதாக ஒரு நிர்வாகி தெரிவித்தார்.

    'நான் சொல்றதை கவனமாக் கேளுங்க. என்னை வாழ வச்சீங்க. இனி நீங்களும் வாழணும். அதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன். முதல்ல நாம வசதியா இருக்கணும். அப்பதான் எதையும் சந்திக்க முடியும். குடும்பத்தை கவனிங்க. குடும்பத்தைப் பார்த்தாதான் நாம் வெளியில போராட முடியும். உங்க மனசில 2016-ஐக் குறிச்சுக்கங்க. 2021 நமக்கு நிச்சயமானது. முன்னேறுங்க. வெற்றி நிச்சயம்.. வரும் காலம் நமதுதான்," என்றாராம் விஜய்.

    இதே போன்ற விழாக்களை கோவை, மதுரை, வேலூர் போன்ற இடங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளார்களாம் விஜய் தரப்பில்.

    English summary
    Actor Vijay is keen in entering politics soon and for that he tested the pulse of his fans at Nellai Kaththi function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X