»   »  மூன்று முகம்-னு தலைப்பு வச்சா ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்க? - யோசிக்கும் விஜய்

மூன்று முகம்-னு தலைப்பு வச்சா ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்க? - யோசிக்கும் விஜய்

Posted by:
Subscribe to Oneindia Tamil

புலி முடிந்து அடுத்த படத்தையும் விஜய் தொடங்கிவிட்டார். அந்தப் படத்துக்கு மனசுக்குள் ஒரு தலைப்பும் கிடைத்துவிட்டது.

ஆனால் வைக்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் காரணமாக தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அட்லீ இயக்க சமந்தா, எமி ஜாக்சன் உடன் நடிக்க, தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கியது.

இதான் அந்த தலைப்பு

விஜய் இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார். இதுவும் போலீஸ் கதை என்கிறார்கள். ‘மூன்று முகம்' என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பது விஜய் மற்றும் படக்குழுவினர் கருத்து.

இது ரஜினி படத் தலைப்பாச்சே

‘மூன்று முகம்' என்பது ரஜினி ஏற்கனவே நடித்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் தலைப்பு. படத்தைத் தயாரித்தவர்கள் சத்யா மூவீஸ் நிறுவனத்தினர்.

ரஜினியிடம்

இந்தத் தலைப்புக்கான அனுமதியை சத்யா மூவீசிடம் கேட்க, அவர்கள் ரஜினிக்கு சம்மதமென்றால் நாங்கள் தருகிறோம் என பந்தை ரஜினி பக்கம் தள்ளிவிட்டுவிட்டனர். இப்போது ரஜினியிடம் சம்மதம் வாங்க முயற்சி நடக்கிறது.

அவர் ஒப்புக் கொண்டாலும்...

இன்னொரு பக்கம், இந்தத் தலைப்புக்கு ரஜினி எளிதில் சம்மதம் தந்துவிடுவார். ஆனால் அவரது ரசிகர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டுமே என்பதால், வேறு தலைப்பையும் யோசிக்கச் சொல்லியிருக்கிறாராம்.

ஏற்கெனவே வாய்க்கா தகராறு...

ரஜினி ரசிகன் என சொல்லிக் கொண்டு திரையில் வளர்ந்தவர் விஜய். சந்திரமுகி படத்துடன் சச்சின் படம் மோதியபோதுதான் இரு தரப்பு ரசிகர்களுக்கும் பிளவு ஏற்பட்டது. அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய்க்கு ஒரு பத்திரிகை பட்டம் தர, அதற்கான விழாவுக்கு விஜய் தரப்பே ஏற்பாடு செய்ய விரிசல் மோதலாக மாறியது நினைவிருக்கலாம்.

English summary
Vijay has selected Rajini's Moondru Mugam title for his 59th movie directed by Atlee, but hesitating to use that because of the rivalry with Rajini fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos