twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் ஆசையில்லை... சினிமாவில்தான் என்கவனம் உள்ளது: விஷால்

    By Mayura Akilan
    |

    நான் அரசியலில் குதிக்கவோ, அடுத்த கட்டத்திற்கு போகவோ எண்ணவில்லை. இப்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே இருக்கிறது. நல்லதை அரசியலில் இருந்து தான் செய்யணும் என்று இல்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

    விஷால், தனது 37வது பிறந்தநாளை நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினார். கூடவே தான் புதிதாக தொடங்கிய வி மியூசிக் ஆடியோ கம்பெனியையும் முறைப்படி இன்று துவக்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் படத்தை பார்த்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் எதேச்சையாக நடிகனாகிவிட்டேன். என் அப்பா-அம்மா, கல்லூரி முதல்வர் ஆகியோரை பார்த்து ரொம்ப பயப்படுவேன். அதற்கு அடுத்து நான் அதிகம் பயப்படுவது பத்திரிகையாளர்களை பார்த்துதான் என்றார்.

    பத்திரிக்கையாளர்கள்

    பத்திரிக்கையாளர்கள்

    சினிமாவில் நான் நன்றாக நடித்தால் அதை பாராட்டுவீர்கள், அதே நான் சரியாக நடிக்கவில்லை என்றால் அதையும் சுட்டி காண்பித்தவர்கள் நீங்கள் தான். இன்று நான் இவ்வளவு வளர்ந்ததற்கு நீங்களும் முக்கிய காரணம்.

    பூஜை தீபாவளி ரிலீஸ்

    பூஜை தீபாவளி ரிலீஸ்

    தற்போது பூஜை படத்தில் நடித்து வருகிறேன். தாமிரபரணி படத்திற்கு பிறகு மீண்டும் ஹரி சாரின் படத்தில் நடிக்கிறேன். இந்தப்படத்திற்காக நிறைய உழைத்து வருகிறோம். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும்தான் பாக்கி உள்ளது. படத்தை உறுதியாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.

    திருமணம் எப்போது?

    திருமணம் எப்போது?

    பூஜை படத்திற்கு பிறகு சுந்தர்.சியின் ஆம்பள, அடுத்து மீண்டும் சுசீந்திரன் இயக்கம், பிறகு தெலுங்கில் ஒரு படம் பண்ண வேண்டியுள்ளது. இப்படி கைநிறைய படங்கள் இருப்பதால் 2015ம் ஆண்டு வரை நான் ரொம்ப பிஸி, அதனால் இப்போதைக்கு திருமணமும் கிடையாது.

    பட தயாரிப்பு

    பட தயாரிப்பு

    கையில் பணமே இல்லாமல் விஷால் பிலிம் பேக்டரியை ஆரம்பித்தேன். தற்போது கொஞ்சம் பணத்தை வைத்து கொண்டு நல்ல படங்களை எடுத்து வருகிறேன்.

    ஆடியோ கம்பெனி

    ஆடியோ கம்பெனி

    அதேப்போல் தான் தற்போது புதிதாக வி மியூசிக் கம்பெனியையும் ஆரம்பித்துள்ளேன். என் சகோதரி ஐஸ்வர்யா தான் இந்த ஆடியோ கம்பெனியை நிர்வகிப்பார். என் படங்கள் மட்டுமல்லாது, மற்றவர்களது படங்களின் ஆடியோவையும் எங்களது ஆடியோ கம்பெனியில் ரிலீஸ் செய்வோம்.

    திருட்டு விசிடியை ஒழிக்க

    திருட்டு விசிடியை ஒழிக்க

    திருட்டு விசிடி.,யை தனி ஆளாக நின்று ஒழிக்க முடியாது. ஒட்டுமொத்த திரையுலகமே ஒன்று திரள வேண்டும். திருட்டு விசிடியை நாமும் ஒரு வகையில் வளர்த்துவிட்டோம். இப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இதை ஒழிக்க வேண்டும். அதற்கு ரஜினி சார், விஜய் சார் போன்றோரும் குரல் கொடுக்க வேண்டும். திருட்டு விசிடியை ஒழிக்க நான் என் உயிரையும் கொடுப்பேன்.

    நடிகர் சங்க கட்டிடம்

    நடிகர் சங்க கட்டிடம்

    எங்க அப்பா என்னிடம் அடிக்கடி, சினிமாவில் மட்டும் அநியாயத்தை தட்டி கேட்டால் போதாது, நிஜத்திலும் தட்டி கேட்க வேண்டும் என்பார். அப்படி தான் நானும் இருக்கிறேன். தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கத்திற்கு கட்டடம் இருப்பதை போன்று நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட வேண்டும். அதை கட்டி முடிக்கும் வரை ஓய மாட்டேன்.

    தவறை தட்டிக்கேட்பேன்

    தவறை தட்டிக்கேட்பேன்

    எம்ஜிஆர்., சிவாஜி போன்றோர் நாடகத்தில் நடித்து இந்த சங்கத்தை உருவாக்கினார்கள். நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் இரண்டு முறை தான் நடிகர் சங்க பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளேன். நான் நடிகர் சங்கத்தில் இருக்கும் யாருக்கும் எதிரி கிடையாது. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டி முடிக்கணும். அது தான் என் குறிக்கோள் அது வரை நான் ஓய மாட்டேன். மேலும் அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டி கேட்பேன்.

    அரசியல் ஆசையில்லை

    அரசியல் ஆசையில்லை

    நடிகர் சங்க பொதுக்குழுவில் நான் பேசியதை பார்த்து திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியதாக பத்திரிகைகளில் செய்தி படித்தேன். அதைப்பார்த்து நான் அரசியலுக்கு வருவதாக பலர் சொல்கிறார்கள். நான் அரசியலில் குதிக்கவோ, அடுத்த கட்டத்திற்கு போகவோ எண்ணவில்லை. இப்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே இருக்கிறது. நல்லதை அரசியலில் இருந்து தான் செய்யணும் என்று இல்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறினார் விஷால்.

    English summary
    Vishal, popular with both Tamil and Telugu audiences, will now be doing a Telugu film after a long time. “Sashikanth is the director and the film will start rolling this December,” says Vishal. “My parents always wanted me to do another Telugu film, so I have been listening to many scripts over the last couple of years, and Sashikanth’s script was good,” says Vishal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X