twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனியார் பேருந்து உரிமையாளர்களே, கொஞ்சம் விஷால் சொல்வதை கேளுங்க!

    By Siva
    |

    சென்னை: திருட்டு விசிடிகளை ஒழிப்பது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள கத்திச் சண்டை படம் வரும் 23ம் தேதி ரிலீஸாகிறது. தற்போது எந்த படம் ரிலீஸானாலும் திருட்டு விசிடி உடனே வெளியாகிவிடுகிறது.

    இந்நிலையில் இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    கத்திச் சண்டை

    கத்திச் சண்டை

    வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி நான் நடித்த 'கத்தி சண்டை' திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

    திருட்டு விசிடி

    திருட்டு விசிடி

    திரைப்பட உலகில் அனைத்துதர மக்களின் உழைப்புடன் ஒரு திரைப்படம் வெளிவருகிறது. அத்திரைப்படம் ஒரு சில விஷமிகளின் இழிச்செயலால் திருட்டு VCD யாக வெளிவருகிறது. அவ்வாறு வெளிவரும் VCD-க்களை உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்தில் திரையிடுகின்றனர், அவர்களுடைய இச்செயலால் திரைப்பட உலகில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    திருட்டு VCDக்கு எதிராக நான் பல முறை குரல்கொடுத்து இருப்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இம் முறை நான் உங்களுடன் கைகோர்த்து குரல்கொடுக்க விரும்புகிறேன்.

    படங்கள்

    படங்கள்

    நீங்கள் உங்களுடைய வாகனத்தில் புதிய படங்களை திரையிடாமல் இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் திரையுலகை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளிபெருக வழி வகுக்கும். எங்களில் நீங்களும் ஒருவராக இருந்து செயல்பட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    English summary
    Actor Vishal has requested private bus companies to join hands with him against pirated VCDs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X