twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'செல்லமே'ன்னு கோலிவுட்டுக்கு வந்த விஷாலுக்கு எது கெத்து?

    By Siva
    |

    சென்னை: விஷால் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய படங்களை பற்றி பார்ப்போம்.

    தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டியின் மகனாக பிறந்த விஷால் நடிகர் அர்ஜுனிடம் வேதம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். படப்பிடிப்பில் ஓடியாடி வேலை பார்த்த விஷாலை பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் அவரை செல்லமே படத்தின் ஹீரோவாக்கினார்.

    கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்பிய விஷால் கேமராவுக்கு முன் வந்தார்.

    செல்லமே

    செல்லமே

    செல்லமே விஷாலுக்கு முதல் படம் தான் என்றாலும் நான் நடிப்பில் கத்துக்குட்டி இல்லை என்பதை அவர் நிரூபித்திருந்தார்.

    சண்டக்கோழி

    சண்டக்கோழி

    அமைதியாகவும் அதே நேரம் அதிரடியாகவும் விஷால் நடித்த படம் சண்டைக்கோழி. இந்த படம் மூலம் அவருக்கு பல ரசிகைகள் கிடைத்தனர்.

    மலைக்கோட்டை

    மலைக்கோட்டை

    பூபதி பாண்டியன் இயக்கத்தில் ஆகஷனில் விஷால் கலக்கிய படம் தான் மலைக்கோட்டை.

    அவன் இவன்

    அவன் இவன்

    பாலா இயக்கத்தில் விஷால் நடித்த அவன் இவன் படம் அவரது திரை உலக பயணத்தில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    வெடி

    வெடி

    வெடி படத்தில் பிரபாகரன் ஐபிஎஸ்ஸாக விஷால் கெத்தாகவும், அதே சமயம் பாசமுள்ள அண்ணனாக பவ்யமாகவும் நடித்திருந்தார்.

    பாண்டியநாடு

    பாண்டியநாடு

    படங்கள் சரியாக போகாத நேரத்தில் விஷால் துணிந்து தயாரித்து நடித்த பாண்டியநாடு வசூலில் அவரது மனதை மட்டும் அல்ல பாக்கெட்டையும் நிறைத்தது.

    நான் சிகப்பு மனிதன்

    நான் சிகப்பு மனிதன்

    பாண்டியநாடு வெற்றியை அடுத்து விஷாலுக்கு மேலும் ஒரு வெற்றி அளித்த படம் நான் சிகப்பு மனிதன். ஏம்ப்பா விஷால் நீ கறுப்பா இருந்துகிட்டு இப்படி படத்திற்கு நான் சிகப்பு மனிதன் என்று பெயர் வச்சிருக்கியே என்று அவரை பார்த்து அவர் அப்பா கேட்டதாக அவர் தெரிவித்தார்.

    கறுப்பு

    கறுப்பு

    கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் சங்கத்தைச் சேர்ந்தவர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கத்தின் சூப்பர் சீனியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    பூஜை

    பூஜை

    சிங்கம் படத்தை எடுத்து கர்ஜித்த ஹரி விஷாலை வைத்து பூஜை படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் நிச்சயம் ஒரு ஆக்ஷன் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Read more about: vishal விஷால்
    English summary
    Vishal keeps on taking more avatars in film industry. The former assistant director who has become a hero is now a producer too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X