»   »  இதுக்குத்தாங்க பாகுபலியை கட்டப்பா கொன்னாரு... "சிலிர்ப்பூட்டும்" சிபிராஜின் பதில்

இதுக்குத்தாங்க பாகுபலியை கட்டப்பா கொன்னாரு... "சிலிர்ப்பூட்டும்" சிபிராஜின் பதில்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டின் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' என்ற ரேஞ்சில் முக்கியக் கேள்வியாக சமூக வலைதளங்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்பது.

வசூலில் அசுர சாதனை புரிந்து வரும் பாகுபலி படத்தின் முதல் பாகம், பாகுபலியை கட்டப்பா கொல்வதாக முடிகிறது. இதற்கான பதில் இரண்டாம் பாகத்தில் வரும் என கூலாக சொல்லி விட்டார் ராஜமௌலி.

ஆனால், இந்தக் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பது தான் மக்களின் பெரும் கவலையாக இருக்கிறது.

ஒரு கேள்வி... ஓராயிரம் பதில்கள்

பாலிவுட் முதல் டோலிவுட் வரை கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விதான் தலையை உடைத்துக் கொண்டிருக்கிறது அத்தனை பேருக்கும். இதற்கு பலவகையான பதில்களும் உலா வருகின்றன.

 

 

விதவிதமா மீம்ஸ்...

வெறும் வாய் கிடைத்தாலே மெல்லும் நெட்டிசன்களுக்கு, அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா? இது தான் கட்டப்பா பாகுபலியைக் கொல்லக் காரணம் என விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி அவர்கள் உலவ விட்டுள்ளனர்.

மகாநடிகன்பா...

சிலர் இருட்டுக்குள்ள எதிரின்னு நினச்சு பாகுபலியை கட்டப்பா பலி செய்து விட்டார் என கூற, சிலர் அந்தக் கொலையையே நீங்கள் தான் செய்றீங்க என ராஜமௌலி கதை சொல்லியிருப்பாரோ என்ற ரீதியில் மகா நடிகனின் அந்தக் குழந்தையே நீங்க தான் பாணியில் மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

கட்டப்பா மகனிடம் சந்தேகம்...

இந்நிலையில், கட்டப்பாவின் மகன் அதாங்க கட்டப்பாவாக நடித்த சத்யராஜின் மகன் சிபிராஜ் இதற்கு ஒரு தினுசான விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார். உங்களது தந்தைதான் கட்டப்பாவாக நடித்தவர். அவர் உங்களிடம் மேட்டரைச் சொல்லியிருப்பாரே. அதை எங்களுக்கும் சொல்லுங்களேன்?" என்று செய்தியாளர்கள் சிபியை அணத்தினர்.

படம் பார்க்க கூட்டிட்டுப் போகலை...

அதைக் கேட்ட சிபிராஜ், "எங்க அப்பாவை பாகுபலி படம் பார்க்க கூட்டிக் கொண்டு போகாத கோபத்தில் அவர் பாகுபலியைக் கொன்று விட்டார்" என்று கூற கேட்ட அத்தனை பேரும் பளார் என சிரித்து விட்டனர்.

சிபியின் பதில்...

என்னமோ சொல்லப் போறார்னு காதுகளை அவலோடு ஓப்பன் செய்து வைத்திருந்த செய்தியாளர்களுக்கு சிபி சொன்ன பதில் சிரிப்பலையை ஏற்படுத்தி விட்டது.

 

 

திரும்பத் திரும்ப...

ஆனாலும், நெட்டிசன்கள் சிபியை விடவில்லை. தொடர்ந்து அவரது டிவிட்டர் பக்கத்தில் இதே கேள்வியை அவர்கள் கேட்டு வருகின்றனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிபி பொங்கி எழுந்து விட்டார்.

இதாங்க காரணம்...

"பாகுபலி படத்துல என்னை பாகுபலியா ராஜமௌலி நடிக்க வைக்கலை. அந்த கோபத்துல தான் அப்பா, பாகுபலியைக் கொன்னுட்டார்" என கிண்டலாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இவிங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே... அமாவாசை!

 

English summary
Right from Bollywood to Tollywood the single question all over is why Kattappa killed Baahubali and there were various answers for the same. Now all of a sudden son of Kattappa - Sathyaraj in his recent interview gave away the answer.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos