»   »  தமன்னா: சின்ன வயசு.. சாதனை பெருசு!

தமன்னா: சின்ன வயசு.. சாதனை பெருசு!

Subscribe to Oneindia Tamil

Tamanna
கோலிவுட்டின் மிக இளம் நாயகியான தமன்னாவுக்கு இன்று 19 வயது பிறக்கிறது.

கேடி படத்தில் தமன்னா நாயகியாக அறிமுகமான போது அவருக்கு 15 முடிந்திருந்தது. ஆனால் அந்தப் படம் அவருக்கு எந்தத் திருப்புமுனையையும் தரவில்லை.

ஒரு இரண்டாம்கட்ட நாயகியாகப் பார்க்கப்பட்ட அவர், தெலுங்கில் செட்டிலாக முடியுமா என பார்த்துக் கொண்டிருந்தபோது, இயக்குநர் பாலாஜி சக்திவேலின் கல்லூரி படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்தப் படத்தின் வெற்றி சாதாரணமாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் ஒன்று என்ற பெருமை கிடைத்தது. கூடவே தமன்னா என்ற நடிகைக்கு அங்கீகாரமும் கிடைத்தது.

இன்று தமிழின் மிக முக்கிய நடிகை, கிட்டத்தட்ட நயன்தாராவின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டார் என்றெல்லாம் பாராட்டப்படுகிறார் தமன்னா. கடும் போட்டிகள் நிறைந்த கோலிவுட்டில் 19 வயதுக்குள் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடிப்பது சாதாரண விஷயமில்லை.

ஏவிஎம்மின் அயன், லிங்குசாமியின் சொந்தப்படம், பரத் ஜோடியாக ஜப் வி மெட் தமிழ் ரீமேக்... இப்படி அவர் கையிலிருப்பதெல்லாம் பெரிய படங்கள்.

தனுஷூடன் அவர் நடித்து விரைவில் வரவிருக்கும் படிக்காதவன் நிச்சய வெற்றி என இப்போதே கோடம்பாக்கம் குறி சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆக, இந்தப் புது வருடம், தமன்னாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத வெற்றிகளை விட்டுச் செல்வது உறுதி.

வாழ்த்துக்கள்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos