»   »  சிம்புவோட நடிக்கிறது ரொம்பக் கஷ்டம்... புலம்பும் மஞ்சிமா மோகன்

சிம்புவோட நடிக்கிறது ரொம்பக் கஷ்டம்... புலம்பும் மஞ்சிமா மோகன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவுடன் நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் என்று அறிமுக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்து இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - மஞ்சிமா மோகன் நடித்து வரும் படம் அச்சம் என்பது மடமையடா.

சிம்புவுடன் இணைந்து மஞ்சிமா மோகன், ராணா டகுபதி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிம்புவுடன் நடிப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறும்போது "சிம்பு படப்பிடிப்புத் தளத்தில் நிறைய வேடிக்கை செய்து கொண்டே இருப்பார். அவரால் நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

முக்கியமான காட்சிகளின் போது கூட என்னால் சிரிப்பை நிறுத்த முடிவதில்லை. அந்த அளவுக்கு சிம்புவின் காமெடி இருக்கிறது. எல்லோரும் என்னைப் பார்க்கிறார்களே என்பது பற்றிக் கூட கவலைப்படாமல் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

இதனால் சிம்புவுடன் இணைந்து நடிப்பது கடினமாக உள்ளது. ஆனால் சிம்புவிற்கு எந்த ஒரு காட்சியும் கடினமானது அல்ல" இவ்வாறு மஞ்சிமா தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் - தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்பு ஒரு பைக் காதலராக நடித்திருக்கிறாராம். மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற மஞ்சிமாவின் ரோல் மாடல் நயன்தாராவாம்.

English summary
Achcham Enbathu Madamaiyada Actress Manjima Mohan Says in Recent Interview "Acting with Simbu is Very Tough"
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos