» 

நான் இனிமே அமலா-அனகா

Posted by:
 

நடிகை அனகா தனது பெயரை மீண்டும் ஒரிஜினல் பெயரான அமலா பால் என்றே மாற்றி விட்டார்.

கேரளாவிலிருந்து நடிக்க வந்தவர் அனகா. சிந்துசமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்த அவர் அந்த சர்ச்சையை தற்போது மறக்க விரும்புகிறாராம்.

யாராவது சிந்துசமவெளி படம் குறித்து கேட்டால், அய்யோ, அதை விடுங்க சார், இப்போது மைனா படத்தில் நடித்திருக்கிறேன். அதைப் பற்றிக் கேளுங்கள் என்று கூறி மைனா குறித்து விரிவாகப் பேசுகிறார்.

சிந்துசமவெளிக்கு் முன்பு வரை அமலா பால் என்ற பெயரிலேயே அவர் நடித்து வந்தார். ஆனால், சிந்துசமவெளி படத்தின்போது இயக்குநர் சாமிதான் அனகா என்று பெயரை மாற்றினார். இப்போது சிந்துசமவெளி தொடர்பான அடையாளத்தையே வெறுக்கும் அனகா, தனது ஒரிஜினல் பெயரான அமலா பாலுக்கே மாறி விட்டாராம்.

இனிமேல் என்னை அமலா என்றே அழையுங்கள் என்றும் கொஞ்சலாக கூறுகிறார்.

சிந்துசமவெளி சர்ச்சையின்போது பெரும் மன வேதனை அடைந்திருந்தாராம் அனகா. அப்போது அவரது தோழியர்தான் பெரும் ஆறுதல் கூறினார்களாம். கேரளாவில் பிஏஆங்கிலம் படித்து வருகிறார் அனகா என்பது உபரித் தகவல்.

Read more about: actress amala paul, actress anaka, சிந்துசமவெளி, நடிகை அனகா, நடிகை அமலா பால், sindhu samaveli

Tamil Photos

Go to : More Photos