»   »  விஜய் இல்லாமல் செல்லக்குட்டி, அபியுடன் ஹேப்பியாக ஓணம் கொண்டாடிய அமலா பால்

விஜய் இல்லாமல் செல்லக்குட்டி, அபியுடன் ஹேப்பியாக ஓணம் கொண்டாடிய அமலா பால்

Posted by:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை அமலா பால் ஓணம் பண்டிகையை தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் கேரளாவில் கொண்டாடியுள்ளார்.

காதல் கணவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்த அமலா பால் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். அவர் தனுஷின் வட சென்னை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஹெப்புலி என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

விவாகரத்து

விவாகரத்து கோரி சென்னை குடும்நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு விஜய் இயக்கத்திலும், அமலா பால் படங்களில் நடிப்பதிலும் பிசியாகிவிட்டனர்.

ஓணம்

விஜய்யை பிரிந்த பிறகு வந்த முதல் ஓணம் பண்டிகையை அமலா தனது சொந்த மாநிலமான கேரளாவில் பெற்றோர் மற்றும் சகோதரருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

பூக்கோலம்

கேரளா வீட்டில் பூக்கோலம் முன்பு அமர்ந்து செல்லப்பிராணியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அமலா. அந்த புகைபடத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சகோதரர்

ஓணம் கொண்டாட வீட்டிற்கு வந்த அமலாவுக்கு அவரது சகோதரர் அமோக வரவேற்பு கொடுத்த புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அமலா. அமலாவுக்கு அவரது சகோதரர் அபிஜித் மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Amala Paul celebrated her first Onam after separation from husband AL Vijay in Kerala.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos