»   »  விஐபி 2... மீண்டும் தனுஷ் ஜோடியாகிறார் அமலாபால்!

விஐபி 2... மீண்டும் தனுஷ் ஜோடியாகிறார் அமலாபால்!

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் நாயகியாக, முதல் பாகத்தில் நடித்த அமலாபாலே நடிக்க இருக்கிறார்.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷிற்கு ஜோடியாக மீண்டும் அமலாபாலே நடிக்க இருக்கிறாராம்.

கடந்த 2014ம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீசாகி பெரும் வசூலைக் குவித்தது இப்படம்.

2ம் பாகம்...

2ம் பாகம்...

இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்திலும் தனுஷே நாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கவிருக்கிறது.

கவுதமி மகள்...

கவுதமி மகள்...

திருமணம், விவாகரத்து என இடையில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியதால், இப்படத்தில் அமலாபால் நடிக்க மாட்டார் என்றும், தனுஷிற்கு ஜோடியாக கவுதமியின் மகள் சுப்புலட்சுமி அறிமுகமாவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை கவுதமி மறுத்தார்.

அமலாபால் தான்...

அமலாபால் தான்...

இந்நிலையில், இந்த இரண்டாம் பாகத்திலும் தனுஷின் ஜோடியாக அமலாபாலே நடிக்க இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனை பேட்டியொன்றில் அமலாபால் உறுதி செய்துள்ளார்.

சமுத்திரக்கனியும்...

சமுத்திரக்கனியும்...

முன்பொரு பேட்டியில், முதல் பாகத்தின் முடிவிலிருந்தே, இரண்டாம் பாகம் துவங்கும் என்று தனுஷ் கூறியிருந்தார். அந்தவகையில் இப்படத்தில் அமலாபாலுடன் சமுத்திரக்கனியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
In a recent media interaction, Amala Paul has confirmed that she will be playing the female lead in Velai Illa Pattadhari 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos