»   »  தனுஷின் 'வடசென்னை'யில் அமலா பால் இருக்கிறாரா, இல்லையான்னு தெரியனுமா?

தனுஷின் 'வடசென்னை'யில் அமலா பால் இருக்கிறாரா, இல்லையான்னு தெரியனுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்படவில்லை. அவர் மீனவ பெண்ணாக நடிக்கிறாராம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா நடிக்கும் படம் வடசென்னை. வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷும், அமலா பாலும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.


இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.


அமலா பால்

வடசென்னை படத்தில் அமலா பால் மீனவ பெண்ணாக நடிக்கிறார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்பதால் அமலா மகிழ்ச்சியில் உள்ளார்.


மீனவ பெண்

மீனவ பெண்ணாக நடிப்பதால் அவர்களின் நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொண்டிருக்கிறாராம் அமலா. வட சென்னை படத்தை மூன்று பாகங்களாக எடுக்க உள்ளனர். முதல் பாகம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்.


நீக்கம்

அமலா பால் தனது காதல் கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்துள்ள நிலையில் அவர் வடசென்னை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அமலா படத்தில் இருந்து நீக்கப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


3 பாகங்கள்

வடசென்னை படத்தின் மூன்று பாகங்களிலும் அமலா பால் தான் நடிக்க உள்ளாராம். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதால் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
As per reports, Amala Paul is acting in Dhanush's Vada Chennai being directed by Vetrimaran.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos