»   »  மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த அமலா பால்

மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த அமலா பால்

Posted by:
Subscribe to Oneindia Tamil

தலைவா படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அமலா பால். ஆனால் இது சினிமாவுக்காக அல்ல!

விஜய்-அமலாபால் முதல் முறையாக இணைந்து ‘தலைவா' என்ற படத்தில் நடித்திருந்தனர். விஜய் இயக்கியிருந்த இப்படம் மும்பையை மையமாக வைத்து வெளிவந்தது.

திருமணம்

திருமணம்

இப்படத்திற்கு பிறகு அமலாபாலும், இயக்குநர் விஜய்யும் திருமணம் செய்துகொண்டனர். சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துவிட்டார் அமலா.

சூர்யா ஜோடியாக

சூர்யா ஜோடியாக

சூர்யாவுக்கு ஜோடியாக, ஒரு குழந்தைக்கு தாயாக ஹைக்கூ படத்தில் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள அந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

மீண்டும் விஜய்யுடன்

மீண்டும் விஜய்யுடன்

இந்நிலையில், ‘தலைவா' படத்திற்கு பிறகு விஜய்யும், அமலாபாலும் தற்போது மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இது, படம் அல்ல, ஒரு விளம்பரத்துக்காக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

நகைக் கடை விளம்பரம்

நகைக் கடை விளம்பரம்

விஜய், பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸின் விளம்பர தூதராக உள்ளார். க்கடையின் விளம்பரங்களில் இதுவரை விஜய் மட்டுமே நடித்து வந்தார். தற்போது எடுக்கப்பட்ட புதிய விளம்பரத்தில் விஜய்யும், அமலாபாலும் இணைந்து நடித்துள்ளனர்.

English summary
Actress Amala Paul has been paired to Vijay for a jewellery advertisement.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos