»   »  திருட்டுப் பயலே 2-ம் பாகம்... முக்கிய வேடத்தில் அமலா பால்!

திருட்டுப் பயலே 2-ம் பாகம்... முக்கிய வேடத்தில் அமலா பால்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கள்ளக் காதல், அதை வைத்து மிரட்டல் என்ற கிளுகிளு கதைக் களத்தில் எடுக்கப்பட்ட திருட்டுப் பயலே படத்தை அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் ரசிகர்கள்.

அந்தப் படத்தை இந்தியில் எடுப்பதாகக் கூறி பாலிவுட் போன இயக்குநர் சுசி கணேசன், சில மோசமான தோல்விப் படங்களைக் கொடுத்ததுதான் மிச்சம். மீண்டும் தமிழுக்கே திரும்பிவிட்டார்.

தனது 'கம் பேக்' படத்துக்காக அவர் தேர்வு செய்திருப்பது அதே திருட்டுப் பயலே கதைக் களம்தான்.

Amala Paul in Thiruttu Payale 2

இந்த படத்தில் ஜீவன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும், அப்பாஸ் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நடிக்கவிருப்பதாகவும் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.

முதல்பாகத்தில் மாளவிகா ஏற்றிருந்த பாத்திரம் கதாநாயகியை விட முக்கியமானது. அந்த ரோலுக்கு அமலா பாலை தேர்வு செய்திருக்கிறார் சுசி கணேசன்.

முதல் பாகத்தைத் தயாரித்த அதே ஏ.ஜி.எஸ். நிறுவனம்தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.

English summary
Amala Paul has signed to play the key role in Susi Ganesan's Thiruttu Payale 2
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos