» 

அமலா பாலுக்கு வயசு 21!

Posted by:

ஒண்ணுமே இல்லியேய்யா.. இந்தப் பொண்ணை எப்படி ஹீரோயினா போடறது... என்று கமெண்ட் அடித்தாலும், அதே நடிகையிடம் கால்ஷீட் வாங்கி படமும் எடுப்பது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வழக்கம். அப்படி கமெண்ட் அடிக்கப்படும் நாயகிகளில் ஒருவர் அமலா பால். இன்று அவர் 21 வயதைத் தாண்டுகிறார்... ஆமாங்க, இன்னிக்கு அவருக்குப் பிறந்த நாள்!

வீரசேகரன்

மலையாளத்தில் ஒரு படம் பண்ண நிலையில், தமிழில் வீரசேகரன் என்ற படத்தில்தான் அமலா பால் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார். சுமாரான பிகர், சுமாரான மேக்கப், ரொம்ப சுமாரான நடிப்பு என பெரிதாக இம்ப்ரெஸ் செய்யாமல்தான் இருந்தார் அந்தப் படத்தில்.

சிந்துசமவெளி

அடுத்த படம் சிந்து சமவெளி. ரொம்பவே சர்ச்சையைக் கிளப்பிய படம் இது. மாமனாரின் இன்ப வெறி டைப்பில் வந்த இந்தப் படத்தில், கட்டிய கணவன் மிலிட்டரிக்குப் போனதும், மாமனாருடன் செட்டிலாகிவிடும் கேரக்டர். அமலா பால் நன்றாகத்தான் நடித்திருந்தார். அவர் நடிப்புக்கு நல்ல பேர் கிடைத்தாலும், படத்தைக் கிழித்து தொங்க விட்டார்கள்.

அதனால் இன்றுவரை தன் பேட்டிகளில் மறந்தும்கூட தன் முதல் இரு படங்களையும் பற்றி மூச்சுவிடுவதில்லை அம்மணி!

 

மைனா

அமலா பாலின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனை தந்த படம் பிரபு சாலமனின் மைனா. அமலா இதைத்தான் தனது முதல் படம் என்பார். சும்மா சொல்லக் கூடாது... அவ்வளவாக மேக்கப் இல்லாத, பருக்கள் நிறைந்த முகத்துடன் சுமாரான பிகர் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்தாலும், ஒஸ்தியான நடிப்பைத் தந்திருந்தார் இந்தப் படத்தில்.

தெய்வத் திருமகள்

மைனா தந்த புகழால், தெலுங்குக்கும் போனார் அமலா. அங்கு ஒரு படம், அடுத்து விகடகவி என்ற சொதப்பல் என்று போனது வாழ்க்கை. அப்போதுதான் விஜய் இயக்கிய தெய்வத் திருமகள் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.

காதலில் சொதப்பி ஜெயித்த படம்!

அடுத்து தமிழில் அவர் செய்த படம் வேட்டை. சுமார் ரிசல்ட். அதற்கடுத்து வந்தது காதலில் சொதப்புவது எப்படி? பசங்களுக்கு தங்கள் காதல் சொதப்பல்களை நினைவுபடுத்தியதாலும், கல்லூரிகளில் தாங்கள் தினமும் பார்க்கும் முகங்களில் ஒன்றாக அமலா பால் தெரிந்ததாலும் படம் ஹிட். அமலாவின் சம்பளமும் தாறுமாறாக உயர ஆரம்பித்தது.

அந்த புகழ்போதையில் ஏகத்துக்கும் கிராக்கி பண்ண ஆரம்பித்தார் அமலா. ஒரு பேட்டி கொடுக்கக் கூட, தயாரிப்பாளரை கெஞ்ச வைத்தார்.

 

முப்பொழுதும் உன் கற்பனைகள்

முப்பொழுதும் உன் கற்பனைகள் தோற்ற பிறகுதான், கொஞ்சம் ஸ்டெடி ஆனால் அமலா. தன் இயல்பை மாற்றிக் கொண்டு, தரையில் நடக்க ஆரம்பித்தார்!

நிமிர்ந்து நில் ஒன்றுதான்...

அமலா பெரிய நடிகை என்ற நிலைக்கு வந்தாலும், அவர் தமிழில் நடிப்பதை விட, தெலுங்குக்குதான் முக்கியத்துவம் தருகிறார் (அமைச்சர்களின் கடத்தல் பிடியிலிருந்து தப்பிக்கவோ என்னவோ!). தமிழில் நிமிர்ந்து நில் என்ற படம் மட்டும்தான். தெலுங்கிலோ, நான்கு படங்கள்!

இன்னிக்கு 21!

அமலா பாலுக்கு இன்று 21 வயது நிறைகிறது. இந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட, 3 நாட்கள் லீவ் எடுத்துக் கொண்டுள்ளார். இன்று மாலை கொச்சிக்குப் போய் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கேக்வெட்டி கொண்டாடப் போகிறாராம். அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லத்தில் சிறிது நேரம் செலவிடப் போகிறாராம்!

See next photo feature article

இந்த வருஷம் குடும்பத்துக்காக...

பிறந்த நாள் குறித்து அமலா கூறுகையில், "போன வருஷம் இன்டஸ்ட்ரி மற்றும் முக்கிய கலைஞர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடினேன். இந்த வருஷம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட ஆசைப் பட்டேன்.." என்றார்.

ஹேப்பி பர்த்டே!

 

Read more about: amala paul, birthday, mynaa, மைனா, அமலா பால், பிறந்த நாள்
English summary
Amala Paul the Mynaa girl is turning 21 today (Oct 26) Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos