twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    22 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தாலும் குறையாத அமலா மவுசு!

    By Shankar
    |

    தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து அமலா ஒதுங்கி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    ஆனாலும் அவரது புகழ், அவர் மீதான ஈர்ப்பு இன்னும் குறையவில்லை. நேற்று அவர் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவரைப் பார்க்கவும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ரசிக மனப்பான்மையுடன் செய்தியாளர்கள் காட்டிய ஆர்வமே அதற்குச் சான்றாக இருந்தது.

    புதுப்புது அர்த்தங்கள் பாத்திருக்கீங்களா?

    புதுப்புது அர்த்தங்கள் பாத்திருக்கீங்களா?

    எண்பதுகளின் கனவு நாயகி. அன்றைக்கு அமலாவுக்கு இருந்த புகழ் என்ன என்பதைக் காட்டும் வகையில் இயக்குநர் கே பாலச்சந்தர் தனது புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இரு காட்சிகள் வைத்திருப்பார் (பூர்ணம் விஸ்வநாதன் அமலா விளம்பரப் பலகைக்கு முத்தமிடப் போய் விழும் காட்சி நினைவிருக்கிறதா?).

    வெற்றிப் பட நாயகி

    வெற்றிப் பட நாயகி

    ஜீவா, மெல்லத் திறந்தது கதவு, கொடி பறக்குது, வெற்றிவிழா, மாப்பிள்ளை என தான் நாயகியாக நடித்த படங்கள் அனைத்திலும், ஹீரோக்களையும் தாண்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அமலா.

    வாய்ப்புகள்

    வாய்ப்புகள்

    புகழின் உச்சத்திலிருந்தபோதே தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துகொண்ட பின்னர், படங்களில் நடிக்காமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். ஏராளமான வாய்ப்புகள் வந்தும் ஏற்க மறுத்து, குடும்பம், பிராணிகள் வளர்ப்பு, சமூக சேவை என நாட்களைக் கழித்தவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதுவும் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக!

    தொலைக்காட்சி தொடர்

    தொலைக்காட்சி தொடர்

    ‘உயிர்மெய்' என்ற நெடுந்தொடரில் மருத்துவராக நடிக்கிறார் அமலா. இதன் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு மிகப்பெரிய கட்டிடத்தில் மருத்துவமனை போன்று அமைக்கப்பட்ட அரங்கில் நடந்தது.

    ஏன் நடிக்கலை?

    ஏன் நடிக்கலை?

    செய்தியாளர்களிடம் அமலா கூறுகையில், "திருமணம், குழந்தைகள், சமூக நலம் என பல்வேறு விஷயங்களில் நான் கவனம் செலுத்தியதால் மீண்டும் திரைத்துறைப் பக்கமே வரவில்லை. எவ்வளவோ வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஏற்கவில்லை.

    குடும்பம் - சமூக சேவை

    குடும்பம் - சமூக சேவை

    இப்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு காரணம், இந்த தொடரின் கதை எனக்கு பிடித்துப் போனது. இதுவும் ஒருவித சமூக சேவை மாதிரிதான்.

    இன்னொன்று சின்னத்திரையில் சில நாட்கள் நடித்தாலே போதும். நிறைய நாட்கள் விடுமுறை கிடைக்கும். அந்த நாட்களில் நான் சமூக சேவைகளில் கவனம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில்தான் நடிக்க முடிவு செய்தேன்," என்றார்.

    சினிமாவில் எப்போ?

    சினிமாவில் எப்போ?

    பெரிய திரையில் எப்போது பார்க்கலாம்?

    எனக்கு அதுபற்றி எந்த யோசனையும் இல்லை. சினிமா வாய்ப்புகளை நான் தவிர்த்தே வருகிறேன். ஆனால் இதுபோல மனதுக்குப் பிடித்த, சமூக அக்கறையுள்ள ஒரு வேடம் அமைந்தால் நடித்தாலும் நடிப்பேன்.

    என்ன வித்தியாசம்?

    என்ன வித்தியாசம்?

    உங்கள் காலத்துக்கும் இன்றைய கால சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

    தொழில்நுட்பம்தான். மிகப்பெரிய மாறுதல்களை திரையுலகம் சந்தித்திருக்கிறது தொழில்நுட்ப ரீதியாக. அதேபோல, மக்கள் படங்களைப் பார்க்கும் பார்வையும் மாறியுள்ளது," என்றார் அமலா.

    English summary
    Actress Amala is returning to film world after 22 years through a mega serial Uyir Mei.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X