»   »  நம் "ஐ"யே பட்டு விடும் போல...பட்டுச் சேலையில் அசத்தும் ஏமி!

நம் "ஐ"யே பட்டு விடும் போல...பட்டுச் சேலையில் அசத்தும் ஏமி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதராச பட்டணம் படம் மூலம் நடிப்பில் தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஏமி ஜாக்சன் இப்போது முழுக்க முழுக்க இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.

அதிலும் ஐ படத்தில் அவர் இளைஞர்களின் உள்ளங்களை வசீகரித்து விட்டார்.

நல்ல நடிப்பையும், கூடவே அளவில்லாத அழகையும் வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஏமி ஜாக்சன் ஐ படத்தில் தனக்குக் கிடைத்த பாராட்டு மழையிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை.

அதை விடுங்க. பட்டுச் சேலையில் ஏமி ஜாக்சனை பார்க்க நேரிட்டது... அந்தக் கதையைப் பார்க்கலாம் வாங்க

சேலையில் வெள்ளை நிலா

இங்கிலாந்துக் கரையில் பிறந்த இந்த ஏமி ஜாக்சன், நம்ம ஊர் காஞ்சிப் பட்டில் பாந்தமாகவே இருக்கிறார்.

நெத்திச் சுட்டியும்.. நடு வகிட்டில் குங்குமும்

நெத்தியில் சுட்டியும், புருவங்களுக்கு நடுவே குங்குமுமாக மங்களகரம்.. இந்த இங்கிலாந்து பெண் குயில்.

மஞ்சள் பட்டில் லண்டன் சிட்டு

மஞ்சள் பட்டில் இந்த லண்டன் சிட்டைப் பார்க்கும்போது மாயவரத்து பெண் போலவே ஒரு சாயல் தெரிவதைத் தவிர்க்க முடியாது.

மனம் மயக்கும் மல்லிகையில்

கூடவே தலை நிறைய மல்லிகையும், கழுத்து நிறைய பொன்னாபரணங்களும் இந்த ஆங்கில அழகிக்கு அழகு சேர்க்கிறது.

பூவோடு சேர்ந்த நாறு போல

உதடு துடிக்க ஆங்கிலத்தில் ஏமி பேசினாலும் பூவோடு சேர்ந்த நாறு போல தமிழோடு இணைந்து தமிழ்ப் பெண்ணாகவே மாறியிருக்கிறார் ஏமி.

ஏமியை பட்டுச் சேலையில் பளிச்சென பார்க்கும்போது நம் "ஐ"யே பட்டு விடும் போலத்தான் இருக்கிறது!

 

English summary
Actress Amy Jackson sizzles in silk saree for a movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos