»   »  ஹோட்டல் தொழிலில் தொப்புக்கடின்னு குதிக்கும் அனுஷ்கா

ஹோட்டல் தொழிலில் தொப்புக்கடின்னு குதிக்கும் அனுஷ்கா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிட்டதால் அனுஷ்கா தனது சம்பளத்தை குறைத்துள்ளாராம். மேலும் ஹோட்டல் வியாபாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் அனுஷ்கா. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பெரிய ரவுண்டு வந்தவர். அவர் நடித்துள்ள பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

பாக்மதி என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பட வாய்ப்புகள்

பாக்மதியை தவிர அனுஷ்கா கையில் வேறு படம் இல்லை. புதிய பட வாய்ப்புகள் அவரை தேடி வருவது இல்லை. இதையடுத்து அவர் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துள்ளாராம்.

ஹோட்டல்

தனக்கு மவுசு குறைந்துவிட்டதை உணர்ந்துள்ள அனுஷ்கா சம்பாதித்த பணத்தை வைத்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஹோட்டல்கள் துவங்க திட்டமிட்டுள்ளாராம்.

திருமணம்

35 வயதாகும் அனுஷ்காவுக்கு இந்த ஆண்டுகுள்ளாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் அவரது பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா

நயன்தாராவை அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த அனுஷ்கா சம்பளத்தை குறைத்துள்ளார். நயன் காட்டில் வாய்ப்பு மழை விடாது பெய்யும்போது அனுஷ்கா மட்டும் வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்.

English summary
Actress Anushka has reportedly reduced her remuneration and planning to be a hotelier soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos