»   »  எனக்கு கூச்சம் ரொம்ப ஜாஸ்திங்க! - சன்னி லியோன்

எனக்கு கூச்சம் ரொம்ப ஜாஸ்திங்க! - சன்னி லியோன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

என்னை எல்லோரும் கவர்ச்சி நடிகையா பாக்குறாங்க... உண்மையில் எனக்கு கூச்சம் ரொம்ப அதிகம் என்கிறார் நடிகை சன்னி லியோன்.

ஒரு காலத்தில் வட அமெரிக்காவில் நம்பர் ஒன் ஆபாச நடிகையாகத் திகழ்ந்தவர் சன்னி லியோன்.

இப்போது அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்தியாவில் கொஞ்சம் அப்படி இப்படி நடித்து வருகிறார்.

அவரது கவர்ச்சி நடிப்பு மற்றும் பொது நிகழ்வில் தோற்றங்கள் பல்வேறு தரப்பு விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் இடையே தொடர்கிறது.

சமீபத்தில் அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் தன்னை மிகவும் கூச்ச சுபாவமுள்ள பெண் என்று குறிப்பிட்டுள்ளார்.

பேட்டி

அந்த பேட்டியில், "விருது வழங்கப்படும் நிகழ்ச்சி மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது நான் உண்மையாகவே கூச்சப்படுவேன். இதனை நம்புவதற்கு மக்களுக்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும். உண்மையிலே நிஜவாழ்க்கையில் நான் வெட்கப்படுபவள்.

போலியானவள் இல்லை

சன்னி லியோனின் உண்மையான வாழ்க்கையானது, எப்போதும் மக்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்று இருக்காது. ஹலோ சொல்லும் போதுகூட வெட்கப்படுவேன். நான் போலியானவள், கர்வம் பிடித்தவள் என்று மக்கள் நினைக்கலாம் ஆனால் உண்மை அதுகிடையாது.

குழந்தையாக நடந்து கொள்ள முடியாது

என்னுடைய முழு வாழ்க்கையும் இப்படி இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். விருந்து நிகழ்ச்சிக்களில் கலந்துக் கொள்ளோம் போது குழந்தை மாதிரி நடந்து கொள்ள முடியாது அல்லவா...," என்றார்.

பிரபலங்கள்

சமூக வலைதளங்களில் தனக்கு பிரபலங்கள் பதில் அளிக்கும் நிலை உருவாகி உள்ளது குறித்து கூறுகையில், "என்னை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்று எனக்கு ஒன்றும் தெரியாது. சன்னி லியோன் வேறு எங்கேயும் சென்றுவிடக்கூடாது என்று அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று நினைக்கின்றேன்," என்று சன்னி லியோன் கூறியுள்ளார்.

ஆமிர்கான்

சமீபத்தில் கூட நடிகர் ஆமிர்கான், சன்னி லியோனுடன் நடிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும், அவர் திறமையை மதிப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood star Sunny Leone says that she is basically a shy type girl.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos