»   »  உத்தம வில்லன் நாயகிக்கு அம்மை...!

உத்தம வில்லன் நாயகிக்கு அம்மை...!

Posted by:
Subscribe to Oneindia Tamil

உத்தம வில்லன் படத்தில் நடித்து வரும் பார்வதி மேனனுக்கு சின்னம்மை தாக்கியிருக்கிறதாம். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘பூ' படத்தில் அறிமுகமானவர் நடிகை பார்வதிமேனன். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மரியான், பெங்களூர் டேய்ஸ் ஆகிய படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.


தற்போது கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பார்வதி தற்போது அந்த படத்தின் ரிலீஸை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்த நிலையில் வெயில் காரணமாக அவருக்கு சின்னம்மை தாக்கியுள்ளது.


அம்மை நோய்

அம்மை நோய்

தனக்கு தற்போது சின்னம்மை நோய் தாக்கியுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


ஃபேஸ் புக் பக்கத்தில்

ஃபேஸ் புக் பக்கத்தில்

மேக்கப் இல்லாமலேயே தங்களுடைய புகைப்படத்தை வெளியிட தயங்கும் நடிகைகளின் மத்தியில், நடிகை பார்வதி சின்னம்மை தழும்புடன் உள்ள தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் மிக தைரியமாக வெளியிட்டுள்ளார்.


வெயில்ல போகாதீங்க

வெயில்ல போகாதீங்க

இந்த நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டதாகவும், சின்னம்மை நோய் தாக்கினால், பிரயாணங்களை தவிர்த்து மருத்துவர் கூறும் கட்டுப்பாடான ஆகாரங்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்றும் அவர் தன்னுடைய அனுபவத்தை தெரிவித்துள்ளார்.


பயப்படாதீங்க

பயப்படாதீங்க

எனவே இந்த நோய் குறித்து யாரும் பயப்படவேண்டாம் என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். நோய் வந்த அனுபவத்தையும் சொல்லி ரசிகர்களுக்கு அட்வைஸ் வேறு சொல்லியுள்ளார் பார்வதி.


English summary
Uthamaillain heroine Parvathi is sufferning from Chicken pox.
Please Wait while comments are loading...