twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விபச்சாரம்தான் குடும்பத்தைக் காக்க ஒரே வழி என்றால் என்ன தவறு அதில்?.. கேட்கிறார் தீபிகா!

    |

    மும்பை: விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதா பாசுவுக்கு நடிகை குஷ்பு மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2ம் தேதி ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை சுவேதா பாசு. இவர் தமிழில் ‘ராரா', ‘சந்தமாமா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    (தீபிகா படுகோனே ஹாட்)

    ‘மக்தே' படத்திற்காக தேசிய விருது பெற்றவரான சுவேதா பண நெருக்கடியாலும், குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    சுவேதா பாசுவுக்கு திரையுலகப் பிரபலங்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் தீபிகா படுகோனேவும் சேர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக தீபிகா படுகோனே கூறியிருப்பதாவது :-

    தப்பேயில்லை...

    தப்பேயில்லை...

    தன்னையும், குடும்பத்தையும் காப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் இதுதான் (விபசாரம்) ஒரே வழி என்றால், அதை செய்வதில் தப்பில்லை.

    நியாயமற்றது...

    நியாயமற்றது...

    எனவே மக்கள் கூறுவதைப்போல அவரைப்பற்றி இழிவாக பேசுவது நியாயமற்றது என நான் நினைக்கிறேன்.

    உதவி செய்யவில்லை...

    உதவி செய்யவில்லை...

    அப்படி பார்த்தால், அவரை இந்த செயலில் ஈடுபடுத்தியவர்கள் குறித்து நாம் ஏன் பேசவில்லை? தற்போது வரை சுவேதாவை நம் எல்லோருக்கும் தெரியும். எனினும் நாம் ஏன் அவருக்கு உதவி செய்யவில்லை?

    நடவடிக்கை தேவை...

    நடவடிக்கை தேவை...

    எனவே அவரைக்குறித்து தவறாக பேசுவதற்கு பதிலாக அவருக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே?' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் மட்டுமா குற்றவாளிகள்...

    பெண்கள் மட்டுமா குற்றவாளிகள்...

    இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், ‘விபசார தொழில் குறித்த விஷயங்களில் முதலில் பெண்களை மட்டும் தான் மையப்படுத்துகின்றனர். பாலியல் தொழிலில் ஆண்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே? ஆனால் ஆண்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன.

    ஆண்களின் பங்கு...

    ஆண்களின் பங்கு...

    விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் போது, அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகின்றன. ஆனால் அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது.

    சமபங்கு...

    சமபங்கு...

    இந்த குற்றத்தில் அந்த ஆணுக்கும் சம பங்கு இருக்கிறதுதானே? ஏன் இந்த பாரபட்சம்? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்?

    போட்டோ எடுக்க போட்டி...

    போட்டோ எடுக்க போட்டி...

    பெண்களை கைது செய்யும் போது புகைப்படம் எடுக்க போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களையும் புகைப்படம் எடுக்க வேண்டியதுதானே? அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை' என இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

    English summary
    When National Award winning child actress Shweta Basu Prasad's involvement in a prostitution racket was 'exposed' in a raid in Hyderabad. When a media person asked her opinion about Shweta Basu Prasad's situation, Padukone replied, "Let me put it this way – if that was the only thing she could do to support herself and family and it was the only way she could make money, there’s nothing wrong with that," according to a report on IndiaTimes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X