»   »  தெலுங்கு கத்தியில் சிரஞ்சீவியின் 'செல்பி புள்ள' தீபிகா படுகோனே?

தெலுங்கு கத்தியில் சிரஞ்சீவியின் 'செல்பி புள்ள' தீபிகா படுகோனே?

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கத்தி தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் 2014 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் கத்தி. விஜய் 2 வேடங்களில் நடித்திருந்த இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக் கூறும் படமாக வெளியான கத்தி வெற்றி பெற்றாலும் கூட, இப்படத்தின் மீதான பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீராமலேயே உள்ளன.

கத்தி

தமிழில் வெளியாகி ஹிட்டடித்த இப்படத்தை தன்னுடைய 150 வது படமாக தெலுங்குலகின் மெகா ஸ்டார் என்று புகழப்படும் சிரஞ்சீவி தேர்ந்தெடுத்திருக்கிறார். அரசியல் காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த சிரஞ்சீவி இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.

ஹீரோயின்

இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சொந்தமாகத் தயாரிக்கிறார். சிரஞ்சீவியின் 150 வது படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும் இப்படத்தின் ஹீரோயின் தேர்வு இன்னும் முடிந்தபாடில்லை.

நயன்தாரா

முதலில் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்று உறுதியாகக் கூறினர். ஆனால் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று நயன்தாரா திட்டவட்டமகத் தெரிவித்து விட்டார். பிறகு அனுஷ்கா நடிக்கப் போவதாக வந்த தகவல்களையும் படக்குழு மறுத்து விட்டது. இந்நிலையில் தீபிகா படுகோனே இப்படத்தில் நாயகியாக நடிக்கப் போவதாகக் கூறுகின்றனர்.

தீபிகா படுகோனே

ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் தீபிகா படுகோனேவின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஏற்கனவே தமிழ், கன்னடத்தில் கால் பதித்து விட்ட தீபிகா தெலுங்குலகில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.விரைவில் ஹீரோயின் குறித்த அறிவிப்புகளை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குத்துப்பாடல்

ஹீரோயின் தேர்வு முடிந்தபாடில்லை என்றாலும் படத்தின் கிளைமேக்ஸ்க்கு முன், ஒரு குத்துப்பாடலை வைத்து அதில் கேத்தரின் தெரசாவை ஆட வைக்கப் போகிறார்களாம். இதற்கு முன் சிரஞ்சீவி ரீமேக் செய்த ரமணா படத்தில் கிளைமாக்ஸ்க்கு முன் ஒரு குத்துப்பாட்டு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Bollywood Actress Deepika Padukone Team up with Chiranjeevi for Kaththi Telugu Remake.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos