»   »  இளம் நடிகையை பழிவாங்கத் துடிக்கும் தீபிகா படுகோனே: காரணம் 'அந்த' நடிகர்

இளம் நடிகையை பழிவாங்கத் துடிக்கும் தீபிகா படுகோனே: காரணம் 'அந்த' நடிகர்

Posted by:
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனக்கு சுத்தமாக பிடிக்காத நடிகை கத்ரீனா கைஃபை பழிவாங்கத் துடிக்கிறாராம்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வந்தார். அப்பொழுது ரன்பிர் நடிகை கத்ரீனா கைஃபுக்காக தீபிகாவை பிரிந்தார். இதனால் தீபிகாவுக்கு கத்ரீனா மீது கடும் கோபம்.

இந்நிலையில் அவரை பழி வாங்கத் துடிக்கிறாராம் தீபிகா.

ஷாருக்கான் படம்

ஆனந்த் எல் ராய் ஷாருக்கான், கத்ரீனா கைஃபை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க முதலில் தீபிகாவிடம் கேட்டதற்கு நான் ஹாலிவுட்டில் பிசி என்று கூறிவிட்டார்.

ஹாலிவுட்

தீபிகா நடித்த ஹாலிவுட் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இந்த படம் ஹிட்டாகும் தான் ஹாலிவுட்டில் பெரிய ஆளாகிவிடலாம் என்ற தீபிகாவின் கனவு தவிடுபொடியாகிவிட்டது. இதனால் அம்மணி கவலையில் உள்ளாராம்.

 

 

கத்ரீனா

ஹாலிவுட் ஒர்க் அவுட்டாகாததால் பாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் தீபிகா. இந்நிலையில் அவர் ஆனந்த் ராய் இயக்கத்தில் நடிக்க கத்ரீனாவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை எப்படியாவது தட்டிப்பறிப்பதில் குறியாக உள்ளாராம்.

 

 

இயக்குனர்

இயக்குனர் ஆனந்துக்கு போன் செய்த தீபிகா நான் இப்போ ஃப்ரீயாக இருக்கிறேன், என்னை உங்கள் படத்தில் நடிக்க வையுங்கள் என்று கூறியுள்ளாராம். இந்த படத்தில் இருந்து கத்ரீனாவை விரட்டாமல் ஓய மாட்டார் தீபிகா என்கிறது விவரம் அறிந்த வட்டாராம்.

English summary
According to recent reports, Deepika Padukone is trying really hard to grab Aanand L. Rai's next from Katrina Kaif which stars Shahrukh Khan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos