»   »  இயக்குனர் தனுஷுக்கு என்ன வேண்டும் என நன்கு தெரியும்: சாயா சிங்

இயக்குனர் தனுஷுக்கு என்ன வேண்டும் என நன்கு தெரியும்: சாயா சிங்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு இயக்குனராக தனுஷுக்கு தனக்கு என்ன வேண்டும் என தெரியும் என்று நடிகை சாயா சிங் தெரிவித்துள்ளார்.

தனுஷ் ராஜ் கிரண், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோரை வைத்து பவர் பாண்டி படத்தை எடுத்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

சிறு வயது ராஜ்கிரணாக தனுஷே நடித்துள்ளார்.

சாயா சிங்

ஒரு நடிகர் இயக்குனர் ஆனால் நடிகர்களிடம் இருந்து எப்படி நடிப்பை வெளிப்படுத்த வைப்பது என்று அவருக்கு நன்கு தெரியும். இது தனுஷுக்கு மிகவும் பொருந்தும் என்கிறார் சாயா சிங்.

தனுஷ்

தனுஷ் முதல் முதலாக ஒரு படத்தை இயக்குவது போன்றே இல்லை. மிகவும் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களை போன்று செயல்படுகிறார். குழந்தை மாதிரி உற்சாகமாக செயல்படுகிறார் என சாயா சிங் தெரிவித்துள்ளார்.

பவர் பாண்டி

திருடா திருடி படத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தான் என்னை பவர் பாண்டி படத்திற்கு பரிந்துரை செய்தார். அந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து தனுஷும் என்னை ஒப்பந்தம் செய்தார் என சாயா கூறியுள்ளார்.

மன்மத ராசா

சுப்பிரமணியன் சிவா இயக்கிய திருடா திருடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயா சிங். அந்த படத்தில் வரும் மன்மத ராசா பாடலுக்கு அவர்கள் போட்ட ஆட்டம் இன்றும் மறக்காது.

English summary
Actress Chaya Singh, who plays an important role in Dhanush's upcoming Tamil directorial debut "Power Paandi", says that as a director, he knows what he wants and how to extract it from his actors.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos