»   »  சொந்தக் கட்சினாலும் தப்பு தான்... அமைச்சருக்கு எதிராக கொடி பிடிக்கும் 'குத்து' ரம்யா

சொந்தக் கட்சினாலும் தப்பு தான்... அமைச்சருக்கு எதிராக கொடி பிடிக்கும் 'குத்து' ரம்யா

Posted by:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி அனுபமா செனாய் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு நடிகையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திவ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டிஎஸ்பி அனுபமா இடமாற்ற விவகாரத்தின் பின்னணியில் கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழில் அமைச்சர் பி.டி.பரமேஸ்வர ராவ்வின் பெயர் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் கூட இந்த விவகாரத்தில் தனது கருத்தினை வலிமையாகப் பதிவு செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார் திவ்யா.

திவ்யா

தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் திவ்யா ஸ்பந்தனா.இவர் தற்போது காங்கிரஸில் சேர்ந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்.

 

 

தொழில்துறை அமைச்சர்

சமீபத்தில் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி அனுபமா செனாய் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு கர்நாடகா தொழில்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.பரமேஸ்வர ராவ் தான் காரணம் என்று தொடர்ந்து செய்திகள் அடிபட்டு வருகின்றன.

 

 

போராட்டங்கள்

இந்த இடமாற்றத்தை எதிர்த்து இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தொழில் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விளம்பரம் இல்லாமல்

அனுபமா செனாய் விளம்பரங்கள் எதுவுமின்றி மிகவும் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி இருக்கிறார். அவரின் இந்த மனப்பான்மையே இத்தனை பேரின் போரட்டங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

காரணம் என்ன

அனுபமா விசாரித்து வந்த ஒரு கொலை வழக்கில் அமைச்சரின் உறவினர்கள் சிலரும் இடம் பெற்றிருக்கின்றனர். இதனால் தனது உறவினர்களை காப்பாற்ற வேண்டி அவர் இவ்வாறு செய்ததாக கூறுகின்றனர்.

 

 

தொலைபேசி அழைப்பு

அனுபமாவிற்கு அமைச்சர் தொலைபேசி செய்து பேசிய பின்னர் தான் இந்த இடமாற்ற உத்தரவு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அமைச்சர் இந்த வழக்கு விவகாரம் குறித்து அனுபமாவுடன் விவாதம் நடத்தியதாகவும் கூறுகின்றனர்.

முதலமைச்சர்

இந்த வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உட்பட பலரும் அமைச்சருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் தனது கட்சி என்றும் கூட பாராமல் தனது வலுவான கண்டனங்களை ரம்யா பதிவு செய்திருக்கிறார்.

இது வழக்கமான

அரசு அலுவலகங்களில் இது அடிக்கடி நடைபெறும் ஒரு செயல்தான் என்று கூறினாலும் இந்த விவகாரத்தில் தனது நடவடிக்கையை சக உறுப்பினர்களிடம் கூறி அமைச்சர் பெருமைபட்டுக் கொண்டதாக கூறுகின்றனர்.

ரம்யாவின்

சொந்த கட்சி என்றும் கூட பாராமல் டிஎஸ்பி இடமாற்ற விவகாரத்தில் ரம்யா தனது கண்டனங்களை வலுவாகப் பதிவு செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

English summary
Divya Spandana Condemn for DSP Transfer Issue. She Wrote on Twitter "Condemn Shenoy's transfer if it was for putting call on hold. People in positions of power must be more circumspect".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos