»   »  விளம்பரம் தேட இந்த பாலிவுட் நடிகை இப்படி கிளம்பிட்டாரே!

விளம்பரம் தேட இந்த பாலிவுட் நடிகை இப்படி கிளம்பிட்டாரே!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா அவரது திருமணம் குறித்து சூசகமாக கூறிவிட்டு தற்போது மறுப்பும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை இஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவரின் மோதிர விரலில் விலை உயர்ந்த கல் பதித்த மோதிரம் இருந்தது. அதுவும் பெரிய கல்.

Esha Gupta denies engagement rumours

அவர் கேட்டார், நான் சம்மதித்தேன் என்று அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டிருந்தார். புகைப்படத்தை பார்த்த பலரும் அவருக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று நினைத்துவிட்டனர்.

இஷாவின் ரசிகர்கள் அவருக்கு திருமணம் நிச்சயமானதை கொண்டாடத் துவங்கினர். இதை பார்த்த இஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

திருமணம் நிச்சயமாகவில்லை. அந்த அளவுக்கு பெரிய கல் மோதிரம் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டால் மக்கள் திருமணம் பற்றி பேசுவார்கள் என தெரிந்தும் விளம்பரம் தேட இஷா இவ்வாறு செய்துள்ளார் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

English summary
Bollywood actress Esha Gupta denied engagement rumours after posting a picture of hers with a big solitaire ring in her hand.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos