»   »  என்னை பார்த்தால் அப்படி தெரியுதா, இல்ல இப்படி தெரியுதா: நடிகை காவ்யா போலீசில் புகார்

என்னை பார்த்தால் அப்படி தெரியுதா, இல்ல இப்படி தெரியுதா: நடிகை காவ்யா போலீசில் புகார்

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஃபேஸ்புக்கில் தனது இரண்டாவது திருமணம் பற்றி அசிங்கமாக விமர்சித்தவர்கள் மீது மலையாள நடிகை காவ்யா மாதவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மலையாள நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு திரையுலகில் ஒரு சிலரை மட்டுமே அழைத்திருந்தனர்.

திருமண ஏற்பாடுகள் ரகசியமாக செய்யப்பட்டன.

மஞ்சு வாரியர்

திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை பிரிய காவ்யா மாதவனே காரணம் என்று கூறி அவரை பலரும் ஃபேஸ்புக்கில் வசைபாடினர். அவரது டைம்லைனிலேயே கண்டபடி விளாசினர்.

காவ்யா

திலீப்புக்கும் சரி, காவ்யா மாதவனுக்கும் சரி இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்நிலையில் தான் நடிகை மஞ்சு வாரியரின் ரசிகர்கள் காவ்யாவை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துவிட்டனர்.

போலீஸ்

நெட்டிசன்கள் தன்னை திட்டுவதை எல்லாம் பார்த்துக் கொண்டு இரண்டு மாதங்களாக பொறுமையாக இருந்தார் காவ்யா. இந்நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் தன்னை திட்டியவர்கள் மீது எர்ணாகுளம் ஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.

விசாரணை

காவ்யாவின் புகாரை பெற்றுக் கொண்ட ஐஜி மோசமாக கமெண்ட் போட்டவர்களின் ஐபி அட்ரஸை டிராக் செய்யுமாறு ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

English summary
Malayalam actress Kavya Madhavan has given complaint to Ernakulam IG about Facebook bullies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos