Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்பா, அம்மா அழகு.. அதனால்தான் நானும் அழகு.. மேக்கப் போடாமலேயே... ஸ்ருதி!
சென்னை: தன் பெற்றோர்கள் அழகானவர்கள் என்பதால் தானும் அழகாக உள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
நட்சத்திர தம்பதியான கமல் - சரிகாவின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில், சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப் படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ருதி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
மேக்கப் போடாமலேயே...
மேக்கப் போடாமலேயே நான் அழகாகத்தான் இருக்கிறேன். சினிமா நடிகைகள் எல்லோரும் படத்தில் அழகாக தெரிகிறார்கள்.
மேக்கப்பும், லைட்டும் காரணம்...
அதற்கு காரணம் மேக்கப் போடுவதும், போகஸ் லைட்டும்தான் காரணம். இதுவே திரையில் நடிகைகளை அழகு படுத்தி காட்டுகிறது.
இயற்கை அழகு...
என்னைப் பொருத்தவரை மேக்கப் போடாமலேயே அழகாக இருக்கிறேன். என் உடல் அமைப்பு இயற்கையாகவே அழகானது.
அழகான பெற்றோர்...
என் பெற்றோர் அழகானவர்கள் என்பதால் நானும் அழகாக இருக்கிறேன்' என அதில் அவர் தெரிவித்துள்ளார்.