twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதியுடன் மீண்டும் நடிக்க ஜோடி சேரும் ஹன்சிகா!

    By Shankar
    |

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் நடிகை ஹன்சிகா.

    இந்தப் படத்தை என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது இயக்குகிறார்.

    ஓகே ஓகே

    ஓகே ஓகே

    உதயநிதி கதாநாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததையடுத்து, உதயநிதியும் இளம் ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடித்தார்.

    இது கதிர்வேலன் காதல்

    இது கதிர்வேலன் காதல்

    இப்படத்தை தொடர்ந்து உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கினார். இதையடுத்து தற்போது நடித்துவரும் ‘நண்பேன்டா' படத்திலும் நயன்தாராவையே ஜோடியாக்கியுள்ளார்.

    மீண்டும் ஹன்சிகா

    மீண்டும் ஹன்சிகா

    இந்நிலையில், உதயநிதி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் மீண்டும் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ‘என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய அகமது இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதியும்-ஹன்சிகாவும் மீண்டும் ஜோடி சேரவுள்ளனர்.

    அக்டோபரில்...

    அக்டோபரில்...

    காதல், காமெடி கலந்து உருவாகும் இப்படத்தை உதயநிதியே தயாரிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது.

    English summary
    After successful OkOk, the Udhayanidhi - Hansika pair joining again for an untitled new movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X