»   »  'புலி' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?

'புலி' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹன்சிகா தனது தோளிகளுடன் ஐரோப்பாவில் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார்.

கோலிவுட்டின் பிசியான நாயகி என்று ஹன்சிகாவை கூறலாம். அவ்வளவு படங்களில் நடித்துள்ளார், நடித்து வருகிறார், நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி ஓடியோடி நடிக்கும் ஹன்சிகாவுக்கு ஒரு குட்டி பிரேக் தேவைப்பட்டது.

ஐரோப்பா

தனது பிசியான நேரத்தில் 5 நாட்கள் சினிமா படப்பிடிப்புகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு ஹன்சிகா ஐரோப்பா சென்றுள்ளார்.

தோழிகள்

ஹன்சிகா தனது தோழிகளுடன் ஐரோப்பாவில் 5 நாட்கள் இருப்பார். அவர் விடுமுறையை கழிக்க ஐரோப்பாவுக்கு சென்றுள்ளது இது இரண்டாவது முறை ஆகும்.

தத்துப் பிள்ளைகள்

ஐரோப்பாவில் இருந்து திரும்பி வந்த பிறகு அவர் தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளை புனேவில் உள்ள லோனாவாலாவுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார்.

பிள்ளைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஹன்சிகா தனது தத்துப் பிள்ளைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலு

ஹன்சிகா, சிம்பு நடித்துள்ள வாலு படம் வரும் மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸாக உள்ளது.

English summary
Hansika has taken a five day break from her work to relax with her friends in Europe.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos