» 

ஊசிபோட்டு பெருக்க வைத்து... லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து... - 'ஹன்ஸிகா ரகசியங்கள்!'

Posted by:

'ஆஹா.. பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா பார்ட்டி...' என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ... சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.

விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.

பிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்ஸிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அடுத்து நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்...

போட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகேஓகேயில் ஒரு கேரக்டரே அவரை பப்ளிமாஸ் என்று வாரும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.

இப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா லைப்போசக்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.

இப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்!

இந்த லைப்போசக்சனை இதற்கு முன்பு 'லைக்கிய' நயனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நேர்ந்த கதி இவருக்கும் வராமலிருந்தா சரி!

Read more about: hansika, tamil cinema, ஹன்ஸிகா
English summary
South cinema's top actress Hansika has undergone liposuction to reduce her weight. Earlier her doctor mother has injected her to show her mature look
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos