»   »  அனுஷ்காவுக்கு சிக்கன், காஜலுக்கு ஹைதரபாதி பிரியாணி… யார் யாருக்கு எது எது ஃபேவரிட்?

அனுஷ்காவுக்கு சிக்கன், காஜலுக்கு ஹைதரபாதி பிரியாணி… யார் யாருக்கு எது எது ஃபேவரிட்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று ஹீரோயின்கள் வாயையும் வயிற்றையும் கட்டியது அந்தக் காலம். இப்போதெல்லாம் நன்றாக ஃபுல் கட்டு கட்டிவிட்டு அதற்கு தகுந்தாற்போல ஜிம்மில் வொர்க் அவுட் செய்துகொள்கிறார்கள்.

அப்படி முன்னணி ஹீரோயின்கள் சிலருக்கு எது ஃபேவரிட் டிஷ், அவர்கள் சமைக்க தெரிந்த ஐட்டம் என்னென்ன லிஸ்ட் எடுத்தோம்.

அனுஷ்கா

ஃபேவரிட் உணவு - சிக்கன். எது செஞ்சாலும் அதுல சிக்கன் இருக்கணும். சமைக்க தெரிந்த ஐட்டம் - கிச்சன் பக்கம் போனதே இல்லை.

தமன்னா

ஃபேவரிட் உணவு - ஃப்ரை பண்ணின எல்லா ஐட்டங்களுமே பிடிக்கும். சமைக்க தெரிந்த ஐட்டம் - டால்

லட்சுமி மேனன்

ஃபேவரிட் உணவு சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா ரெண்டுக்கும் நான் அடிமை. சமைக்க தெரிந்த ஐட்டம் சுடச்சுட..... வென்னீர் போடுவேன்.

பிந்துமாதவி

ஃபேவரைட் டிஷ் - உண்மைய சொல்லவா? பிரியாணி. வாரத்துக்கு ரெண்டு நாள் பிரியாணியை வெட்டிடணும். அதுலயும் அந்த மட்டன் பீஸை...அய்யய்யோ ஆசையை கிளப்பிவிட்டுட்டீங்களே... எனக்கு இப்ப பிரியாணி வேணும். சமைக்க தெரிஞ்ச ஐட்டம் - கிச்சன் பக்கம் போனதே இல்லை. ஒருமுறை அம்மா ஊருக்கு போயிருந்தாங்க. அப்ப அப்பாவுக்கு சமைச்சு கொடுத்தேன். அப்புறம் அப்பா அம்மாவை வெளில எங்கேயுமே போக விடறதில்லை. மேரேஜுக்குள்ள கத்துக்கலாம்.

வேதிகா

ஃபேவரிட் டிஷ் - சைனீஸ் ஃபுட் எல்லாத்துக்குமே வேதிகா அடிமைப்பா... ச.தெ.ஐட்டம் - எல்லாம் ஐட்டங்களுமே நல்லா சமைப்பேன்பா...முக்கியமா ஃப்ரைட் ரைஸ், பாஸ்தா, ரசம், சூப், சாலட், தோசை

காக்கா முட்டை ஐஸ்வர்யா

ஃபேவரிட் உணவு நான் ஒரு சரியான சாப்பாட்டு ராமி. நடுராத்திரி 1 மணிக்கு பிரியாணி கொடுத்தாக்கூட வெட்டுவேன். சமைக்க தெரிந்த ஐட்டம் ஆந்திர ஸ்பெஷல் மீன் குழம்பு நான் வெச்சு நீங்க சாப்பிட்டா எனக்கு அடிமையாகிடுவீங்க...

ஜனனி

ஃபேவரிட் உணவு அம்மா பண்ற சாம்பார் சாதம். நிறைய நெய் போட்ருக்கணும். அப்பளம் கண்டிப்பா இருக்கணும். சமைக்க தெரிந்த ஐட்டம் தோசை ஊத்துவேன். ஆனா வட்டமாத் தான் வரணும்னு எதிர்பார்க்க கூடாது.

ப்ரியா ஆனந்த்

ஃபேவரைட் உணவு - பிரியாணி. ஃபுல் கட்டு கட்டுவேன். சமைக்க தெரிந்த ஐட்டம் - கேக்.

காஜல் அகர்வால்

ஃபேவரைட் உணவு - ஹைதரபாத் பிரியாணின்னா பிரியம். சவுத் இண்டியன் டிஷஸ் அதுவும் செம காரமான டிஷஸ்னா கொள்ளை பிரியம்.மும்பைல ஒரு இடத்துல பானி பூரி செம டேஸ்ட்டா இருக்கும். மும்பை போனா மிஸ் பண்ணவே மாட்டேன். சமைக்க தெரிந்த ஐட்டம் - தளி சாப்பாடு பண்ணுவேன். ஃப்ரென்ட்ஸ்
ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்கு வந்தா லன்ச் என் கையாலதான்.

English summary
Here is the list of favorite foods of top Tamil cinema heroines.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos