»   »  நான் ஜோடி சேர்ந்தவர்களில் ரஜினி ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய கற்றுக் கொண்டேன்! - அனுஷ்கா

நான் ஜோடி சேர்ந்தவர்களில் ரஜினி ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய கற்றுக் கொண்டேன்! - அனுஷ்கா

Posted by:
Subscribe to Oneindia Tamil

நான் ஜோடியாக நடித்த நடிகர்களில் ரஜினி சார் ரொம்ப ஸ்பெஷல். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி இந்த வாரம் வெளியாகிறது. இதே படம் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த நிலையில் அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "இஞ்சி இடுப்பழகி' படம் பெண்களுக்கு பிடிக்கும்.

எடையைக் கூட்டினேன்

‘இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக முதலில் ‘போட்டோஷுட்' எடுத்த போது பொருத்தமாக அமையவில்லை. மேக்கப்- ஆடை வடிவமைப்பால் சரி செய்யலாம் என்றனர். அதிக மேக்கப் ஆபத்தை விளைவிக்கலாம். உடல் எடையை அதிகாரித்தாலும் ஆபத்து வரும் என்றார்கள். என்றாலும், உடல் எடையை அதிகமாக்குவதுதான் சரி என்று முடிவு செய்தேன். 3 மாதங்களில் உடல் எடை 17 கிலோ கூடியது.

எதுவும் அழகுதான்

ஒல்லியோ, குண்டோ எதுவும் அழகுதான். உடல் தோற்றத்தைவிட மனதுதான் உண்மையான அழகு என்பதுதான் இந்த படத்தின் கதை.

ரஜினி ஸ்பெஷல்

நான் இணைந்து நடித்தவர்களில் ரஜினி ரொம்ப ஸ்பெஷல். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். சூப்பர் ஸ்டாராக இருந்தும் அவரது எளிமை மிகவும் பிடித்தது. அவரது நடிப்பும், பொது வாழ்க்கையும் மிகவும் கவர்ந்தது.

 

 

மற்ற ஹீரோக்களும்...

சூர்யா யூனிட்டில் எல்லோரையும் மதிப்பார். விக்ரம் ஆலோசனை வழங்குவார். ஆர்யா, பிரபாஸ் உள்பட எல்லோரும் எனது நண்பர்கள்.

உயரமாக இருப்பதால்

நான் உயரமாக இருப்பதால் சில வேடங்கள் பொருத்தமாக இல்லை. என்றாலும் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. வெற்றிப் படங்களில் நடிக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். என்றாலும் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஜெயிக்க வைப்பது ரசிகர்கள் கையில். நான் சினிமாவுக்கு வருவேன் என்றே நினைக்கவில்லை. எல்லாம் கடவுள் விருப்பம்.

 

 

நல்ல படங்கள்

திரை உலகில் போட்டி தேவை. அப்போதுதான் சிறந்த நடிப்பை வழங்க முடியும். ‘நம்பர்-1' போட்டியில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும். எனக்கு வரிசையாக நல்ல படங்கள் அமைந்தது சந்தோஷமான விஷயம்.

உலக அளவில் பாகுபலி

அடுத்து எனது நடிப்பில் பாகுபலி-2, சிங்கம்-3 படங்கள் வருகின்றன. பாகுபலி படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. இது உலக அளவில் கொண்டு செல்லும் படமாக இருக்கும்,'' என்றார்.

திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டார் அனுஷ்கா.

 

English summary
Actress Anushka says that Rajinikanth is her favourite hero and she has learned a lot from his life.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos