»   »  அடுத்த வருடம் டும் டும் டும்... அது ஒரு காதல் திருமணம்... பிரியாமணி அதிரடி !

அடுத்த வருடம் டும் டும் டும்... அது ஒரு காதல் திருமணம்... பிரியாமணி அதிரடி !

Posted by:
Subscribe to Oneindia Tamil

அடுத்த வருடம் டும் டும் டும்... அது ஒரு காதல் திருமணம்... பிரியாமணி அதிரடி !

திருச்சி : அடுத்த வருடம் தனது திருமணம் நடைபெறும் என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். அத்திருமணம் நிச்சயமாக பெற்றோரின் சம்மதத்தோடு நடைபெறும் காதல் திருமணமாக இருக்கும் என அவர் கூறியிருப்பதால் அவர் காதலித்து வருவது தெரிய வந்துள்ளது.

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்திற்காக பிரியாமணி தேசிய விருது பெற்றார்.

ஆனால், தொடர்ந்து படவாய்ப்புகள் அமையாததால் தமிழ் சினிமாவில் பிரியாமணியைக் காண இயலவில்லை. இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்தார் பிரியாமணி.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரியாமணி கூறியதாவது :-

கன்னடப் படம்...

நான் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இன்னும் ஓரிரு நாளில் அந்த படப்பிடிப்பு முடிந்துவிடும். அடுத்த ஜூன் மாதம் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். தமிழ் படத்தில் நடிக்க எனக்கு இதுவரை வாய்ப்பு வரவில்லை. வாய்ப்பு வந்ததும் தமிழ் படத்தில் நடிப்பேன்.

 

 

வில்லி ஆசை...

பருத்தி வீரன் படத்தில் உள்ள கதையம்சம் போல எந்த படமும் இதுவரை வரவில்லை. வில்லி காதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அதிக ஆசையாக உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம்தான்.

அரசியல் ஆசையில்லை...

குறைந்த பட்ஜெட் படத்தில் நடிக்க என்னை எந்த இயக்குனரும் அணுகவில்லை. தமிழ் படத்தில் நான் நடிக்க முடியாமல் நீண்ட இடைவெளி வர இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்தான் காரணம். அரசியலுக்கு வர எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.

காதல் திருமணம்...

எனக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. எனது திருமணம் காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். மாப்பிள்ளை சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இந்தியரா? வெளிநாட்டை சேர்ந்தவரா? என்பதை இப்போது கூற முடியாது. எனது திருமணத்தை முறைப்படி தெரிவிப்பேன்.

ரகசிய கேமரா...

ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் மட்டுமல்ல எந்த பெண்களையும் படம் எடுத்து வெளியிடுவது தவறான செயல். அதில் அவர்களுக்கு என்னதான் மகிழ்ச்சி கிடைக்க போகிறதோ தெரியவில்லை?

பெண்ணின் வாழ்க்கை...

அவர்கள் அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்து பார்த்தது உண்டா? எனக்கு அதுபோன்ற சம்பவம் இதுவரை நடைபெறவில்லை. யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Priyamani has said that she will get married by next year.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos