»   »  நான் ஏன் ரகசியத் திருமணம் செய்யனும்... "அப்பாடக்கர்" அஞ்சலி

நான் ஏன் ரகசியத் திருமணம் செய்யனும்... "அப்பாடக்கர்" அஞ்சலி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிச்சயமாக ரகசிய திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என நடிகை அஞ்சலி உறுதிபட தெரிவித்துள்ளார்.

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் தமது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி முன்னணி நடிகைகளுள் ஒருவரானவர் அஞ்சலி.

இயக்குனர் களஞ்சியம் மற்றும் சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தமிழ் திரை உலகில் இருந்து அவர் திடீரென மாயமாகிவிட்டார். ஒருவழியாக அனைத்து பிரச்னைகளும் சூடு தணிந்துவிட்ட நிலையில், தற்போது தமிழில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டவர், ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், மாப்ள சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ளப் பேட்டியில், தமக்கு திருமணமாகிவிட்டதாக வெளியான செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

திருமணத்தை யோசிக்க நேரமில்லை...

இதுகுறித்து அவர் கூறியதாவது, " மீண்டும் பழைய அஞ்சலியாக மாறி, மூன்று படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். எனவே திருமணத்தைப் பற்றி யோசிக்க இப்போது நேரம் இல்லை.

உண்மைக்கு புறம்பானது...

எனக்கு திருமணமானதாக வெளியான செய்திகள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானது. உண்மை இல்லாத ஒரு விஷயத்தை எத்தனை நாளைக்குத் தான் சொல்ல முடியும்?

அமைதிக்கான காரணம்...

அதைப்பற்றி பேசமால் இருப்பதே மேல் என்று அமைதியாக இருந்து விட்டேன். சரியான சந்தர்ப்பம் அமையும்போது திருமணம் செய்துகொள்வேன்.

ரகசிய திருமணம் அல்ல...

ஆனால் ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். அதை உறுதியாக நம்பலாம்.

என் பெரிய பலம்...

தற்போது என் அம்மாவுடன் தங்கி இருக்கிறேன். நடந்து முடிந்த எல்லாப் பிரச்சினைகளும் அவருக்குத் தெரியும். அதனால், அவர் தான் எனக்கு பெரிய பலமாக இருக்கிறார்.

அது ஒன்றே போதும்...

என்னை யார் நம்புகிறார்களோ இல்லையோ, என் அம்மா மற்றும் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அது ஒன்றே போதும்.

குடும்பத்தினர் ஆசை...

சினிமாவில் நல்ல பெயர் இருக்கும்போதே, புகழுடன் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு, செட்டிலாகி விட வேண்டும் என்பது அவர்கள் கனவு. அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Anjali has denied the rumors about her marriage and said that she will not marry anyone secretly
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos