»   »  ஒரு நதியா மாதிரி, ஒரு குஷ்பு மாதிரி.. இது சாக்‌ஷி அகர்வாலின் சின்னச் சின்ன ஆசை

ஒரு நதியா மாதிரி, ஒரு குஷ்பு மாதிரி.. இது சாக்‌ஷி அகர்வாலின் சின்னச் சின்ன ஆசை

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவர்ச்சியில் கலக்குவதை விட நதியா மாதிரி, குஷ்பு மாதிரி நடிப்பதையே தான் விரும்புவதாகவும், அவர்களைப் போல நடிக்க தான் ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

25 வயதான சாக்‌ஷி ஏகப்பட்ட விளம்பரங்களில் தலை காட்டியவர். பின்னர் டிவி நிகழ்ச்சிகளில் வலம் வந்தவர். இப்போது திரைப்பட நடிகையாகியுள்ளார்.

இவரது பெற்றோருக்கு பூர்வீகம் நைனிடால். ஆனால் சாக்‌ஷி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.

கன்னட நடிகை...

மாடல் அழகியாக பெங்களூரில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சாக்‌ஷி, இரண்டு கன்னடப் படங்களிலும் தலை காட்டியுள்ளார். பிறகு தமிழுக்கு வந்தார். இப்போது தமிழிலேயே செட்டிலாகி விட்டார்.

கககபோ...

யோகன், திருட்டு விசிடி, அத்யன், கககபோ என கை நிறைய படங்கள் சாக்‌ஷிக்கு. அதிலும் கககபோவை ரொம்பவே எதிர்பார்க்கிறார். ஏன் என்று கேட்டால் அப்படத்தின் கதை இவரை சுற்றிச் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இது வேற...

நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ள சாக்‌ஷி இப்போது கககபோவை ரொம்ப எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அதற்கு முன்னாடி ஒரு விஷயம், விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த கககபோவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இந்தப் படத்தின முழுப் பெயர் கவிதா கண்ணதாசன் காதலிக்கப் போறாங்க என்பதாகும்.

எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி...

தனது படங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "கககபோ செம காமெடி படம். எனது கேரக்டர்தான் படத்தின் முக்கிய கருவே. எனவே என்னைச் சுற்றித்தான் படமே போகும். அது எனக்கு எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி. எல்லோரும் என்னைப் பார்ப்பார்கள் இல்லையா, அதனால்தான்.

பெண்களுக்கு முக்கியத்துவம்...

இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். அதேசமயம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார்கள். இப்படி ஒரு ரோல் எல்லா நாயகிகளுக்கும் கிடைக்காது. எனக்குக் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

அங்கீகாரம் கிடைக்கும்...

பவர்ஸ்டார், மதன்பாப், சிங்கம்புலி என செமையான காமெடின்கள் படத்தில் உள்ளனர். அனைவரும் அசத்தியுள்ளனர். இந்தப் படத்தை ரசிப்பதோடு என்னையும் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

குஷ்பு மாதிரி...

எனக்கு நதியா, குஷ்பு ஆகியோரை ரொம்பப் பிடிக்கும். அவர்களைப் போல நடித்துப் பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். கவர்ச்சி மட்டுமல்லாமல் நடிப்பும் முக்கியம் இல்லையா" எனத் தெரிவித்துள்ளார் சாக்‌ஷி.

English summary
Actress Sakshi Agarwal says, "I wish I could do roles like what Kushbhu and Nadhiya did when they were in their prime".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos