»   »  யாரைப் பார்த்தாலும் எப்போ கல்யாணம்னு கேட்டு கடுப்பேத்தறாங்க! - காஜல் அகர்வால்

யாரைப் பார்த்தாலும் எப்போ கல்யாணம்னு கேட்டு கடுப்பேத்தறாங்க! - காஜல் அகர்வால்

Posted by:
Subscribe to Oneindia Tamil

யாரைப பார்த்தாலும் எப்போ கல்யாணம்னு கேட்டு கடுப்பேத்தறாங்க.. கோவம் கோவமா வருது என்று வருத்தமாகக் கூறுகிறார் நடிகை காஜல் அகர்வால்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "பொதுவாக நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்க தொடங்கி விடுகிறார்கள். செம கடுப்பாக இருக்கும்.

அதே மாதிரி திருமணத்துக்குப் பிறகு வாய்ப்புத் தர மறுக்கிறார்கள். தந்தாலும் அக்கா, அம்மா வேடங்கள்தான்.

என்னிடமும் இதே கேள்வியை நிறையப் பேர் கேட்கிறார்கள். எனக்கு இது சுத்தமாகப் பிடிப்பதில்லை. கோபமாக வருகிறது.

நடிப்பையும் திருமணத்தையும் முடிச்சுப் போட்டுப் பேசக்கூடாது. நடிப்பு என்பதும் ஒரு வேலைதான். திருமணமான பெண்கள் வேலைக்குப் போவதில்லையா? நடிகைகளும் இப்படித்தான். திருமணத்துக்குப் பிறகும் நடிகைகளுக்கு வாய்ப்பு தர வேண்டும்," என்றார்.

English summary
Kajal Agarwal has strongly condemned for not giving chances to married heroines.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos