»   »  யோகா குருவுக்கு ரூ.2 கோடி வீட்டை பரிசளித்த ஜெயம் ரவி ஹீரோயின்

யோகா குருவுக்கு ரூ.2 கோடி வீட்டை பரிசளித்த ஜெயம் ரவி ஹீரோயின்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது யோகா குருவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக அளித்துள்ளாராம்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க வரும் முன்பு மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரைக்கு தனது 18வது வயதில் சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் யோகா செய்த சூர்ய நாராயண் சிங்கை பார்த்து வியந்துள்ளார்.

அதன் பிறகு குருவிடம் சென்று தனக்கு யோகா கற்றுத் தருமாறு கூறியுள்ளார் கங்கனா.

யோகா

18 வயதில் இருந்து கங்கனா சூர்ய நாராயண் சிங்கிடம் யோகா கற்று வருகிறார். இந்நிலையில் சூர்ய நாராயண் சிங் மும்பையில் யோகா மையம் ஒன்றை துவங்க திட்டமிட்டார்.

பரிசு

குருவின் திட்டம் குறித்து அறிந்த கங்கனா அந்தேரி பகுதியில் உள்ள தனது இரண்டு பெட்ரூம் வீட்டை குருவுக்கு பரிசாக அளித்து அங்கு யோகா மையம் நடத்துமாறு கூறியுள்ளார்.

ரூ.2 கோடி

கங்கனா தனது யோகா குருவுக்கு அளித்த வீடு ரூ.2 கோடிக்கு மேல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு குரு தட்சணை என தெரிவித்துள்ளார் கங்கனா.

கங்கனா

வீட்டை கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை யோகா மையமாக மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார் கங்கனா ரனாவத். சூர்ய நாராயண் சிங்கிடம் யோகா கற்றுக் கொள்ளுமாறு அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறி வருகிறார்.

English summary
Bollywood actress Kangana Ranaut has gifted her Rs. 2 crore worth flat to her yoga guru Surya Narayan Singh as ‘guru dakshina’ .
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos