»   »  டைம்பாஸுக்காக காதலிக்க ரெடி: குண்டு போட்ட நடிகை கங்கனா

டைம்பாஸுக்காக காதலிக்க ரெடி: குண்டு போட்ட நடிகை கங்கனா

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பொழுதுபோக்கிற்காக காதலிப்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் இருந்து பாலிவுட்டுக்கு வந்தவர் கங்கனா ரனாவத். 28 வயதில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுவிட்டார். கங்கனாவுடன் நடிக்க வேண்டும் என்றால் பிற நடிகைகள் தயங்குகிறார்கள். காரணம் நடிப்பில் நம்மை தூக்கி சாப்பிட்டுவிடார் என்ற அச்சம் நடிகைகள் மத்தியில் உள்ளது தான்.

அண்மையில் கங்கனா, மாதவன் நடிப்பில் வெளியான தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இம்ரான் கான்

அண்மை காலத்தில் எந்த ஒரு ஹிட்டும் கொடுக்காத இம்ரான் கானும், கங்கனாவும் சேர்ந்து கட்டி பட்டி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள். நிகில் அத்வானி இயக்கி வரும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ரிலீஸாக உள்ளது.

காதல்

படத்தில் கங்கனா காதல் மீது நம்பிக்கை இல்லாததால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ விரும்புகிறார். இது போன்ற போல்டான கதாபாத்திரங்களில் நடிக்கத் தயங்காதவர் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

டைம்பாஸ்

திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கங்கனா தெரிவித்துள்ளார். மேலும் டைம்பாஸுக்காக ரொமான்ஸ் செய்யவும் அவர் தயாராக உள்ளாராம்.

திருமணம்

டேட் செய்யும்போது திருமணத்தை பற்றி நினைப்பது இல்லை. முதலில் அந்த உறவை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அந்த உறவில் நம்பிக்கை இருந்தால் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்கிறார் கங்கனா.

ஆதித்யா பஞ்சோலி

நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட நடிகர் சூரஜ் பஞ்சோலியின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலியுடன் கங்கனா சிறிது காலம் தொடர்பு வைத்திருந்தார். நடிக்க வந்த புதிதில் கங்கனா ஆதித்யாவுடன் தொடர்பு வைத்திருந்தார்.

English summary
Actress Kangana Ranaut, who will be seen in 'Katti Batti' shortly, said that she believes in what she called "timepass" romance.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos