»   »  மல்லுவுட்டில் சில்வர் ஜுபிளி கொண்டாடும் காவ்யா மாதவன்

மல்லுவுட்டில் சில்வர் ஜுபிளி கொண்டாடும் காவ்யா மாதவன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காவ்யா மாதவன் மலையாள படங்களில் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

காவ்யா மாதவன் 7 வயதில் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார். வளர்ந்த பிறகு ஹீரோயின் ஆனார். மல்லுவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

காவ்யா மாதவன் கால்ஷீட் வாங்க இயக்குனர்கள் கால் கடுக்க காத்திருந்த காலம் எல்லாம் கூட உண்டு.

திருமணம்

தொடர்ந்து வெற்றி நாயகியாக இருந்து வந்த காவ்யா 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவரோடு குவைத்தில் செட்டிலானார். காவ்யா இனிமேல் நடிக்க மாட்டாரா என்று அவரது ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

விவாகரத்து

குவைத் சென்ற வேகத்தில் கேரளாவுக்கு திரும்பி வந்த காவ்யா மாதவன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். 2011ம் ஆண்டு அவருக்கு விவாகரத்து கிடைத்தது.

25 ஆண்டுகள்

தொடர்ந்து நடித்து வரும் காவ்யா மாதவனுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. இந்நிலையில் காவ்யா மல்லுவுட்டுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

புதுப்படம்

காவ்யா நடித்துள்ள ஆகாஷ்வாணி படம் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. காவ்யா இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

English summary
Kavya Madhavan who entered Malayalam film industry at the age of seven has completed 25 years in the industry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos