Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகையர் திலகம்... சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் - சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் படமாக்கவுள்ளனர்.
வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில், நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, படக்குழு, 'நடிகையர் திலகம்' படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.
படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
வலுவான திரைக்கதையுடன் உருவாகும் 'நடிகையர் திலகம்', தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படமாக மாறும் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.