»   »  புலியை பார்த்து கை, கால் உதறும் கீர்த்திக்கு கிடைத்த சிங்கம் படம்#suriya

புலியை பார்த்து கை, கால் உதறும் கீர்த்திக்கு கிடைத்த சிங்கம் படம்#suriya

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ஹன்சிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.


Keerthy Suresh is Suriya's girl in TSK

இந்நிலையில் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அண்மையில் கீர்த்தி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ வெற்றி பெற்றுள்ளது.


கீர்த்தி தற்போது விஜய்யின் பைரவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கீர்த்தி முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார். சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் எஸ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


அடுத்த மாதம் தானா சேர்ந்த கூட்டத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

English summary
Keerthy Suresh is set to act with Suriya in his upcoming movie 'Thaana Serndha Koottam' to be directed by Vignesh Shivan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos