»   »  போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்

போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கைதி எண் 150 படத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என பல நடிகைகள் தற்போது புலம்புகிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அரசியலுக்கு போன சிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து கைதி எண் 150 மூலம் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.

ரூ.100 கோடி

கைதி எண் 150 படம் ரிலீஸான அன்று பாகுபலி படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் ரிலீஸான நான்கே நான்கு நாட்களில் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்ததை அவரது ரசிகர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளதே படத்தின் மெகா வெற்றிக்கு காரணம். சிரு படத்தில் வயதானவர் போன்றே தெரியவில்லை.

இளமை

சிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ தற்போதும் அப்படியே இளமையாகத் தான் உள்ளார். வந்துட்டேன்னு சொல்லு போனது மாதிரியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லும்படி உள்ளார் சிரு.

காஜல் அகர்வால்

கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். முன்னதாக பல ஹீரோயின்களிடம் கேட்க சீரஞ்சீவிக்கா அவர் ரொம்ப சீனியராச்சே என்று தெறித்து ஓடிவிட்டனர்.

நடிகைகள்

காஜலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார். பின்னர் ராம் சரணின் நட்புக்காக சிரு ஜோடியாக நடித்தார். படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிச்சிருக்கலாமே, நல்ல ஹிட் படம் கையை விட்டுப் போய்விட்டதே என பல நடிகைகள் தற்போது கவலையில் உள்ளனர்.

English summary
Actresses who refused to act with Chiranjeevi in his come back movie Khaidi No 150 are sad after it has become a huge hit.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos