»   »  2014ல் அதிகம் விரும்பப்பட்ட மலையாள நடிகைகள்: காவ்யா மாதவன் நிலைமை இவ்ளோ மோசமா!

2014ல் அதிகம் விரும்பப்பட்ட மலையாள நடிகைகள்: காவ்யா மாதவன் நிலைமை இவ்ளோ மோசமா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: கொச்சி டைம்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் 2014ம் ஆண்டில் கேரளாவில் அதிகம் விரும்பப்பட்ட நடிகை இஷா தல்வார் என்பது தெரிய வந்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் கொச்சி பிரிவான கொச்சி டைம்ஸ் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகள் யார் என ஆன்லைனில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. மக்களும் தங்களுக்கு பிடித்த நடிகைக்கு வாக்களித்துள்ளனர்.

பதிவான வாக்குகள் அடிப்படையில் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 15 நடிகைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இஷா தல்வார்

கொச்சி டைம்ஸின் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இஷா தல்வார். தில்லு முல்லு படம் மூலம் கோலிவுட் வந்தாரே அவரே தான். மும்பையைச் சேர்ந்த இஷா மலையாளப் படங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா

சென்னைஸ் டைம்ஸின் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் நயன்தாரா கொச்சி டைம்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் தற்போது மம்மூட்டியுடன் சேர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்துள்ளார்.

அமலா பால்

தமிழகத்து மருமகளாகிவிட்ட கேரளத்து பெண்குட்டி அமலா பால் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டாலும் பட உலகில் மவுசு குறையவில்லை.

ராய் லக்ஷ்மி

கொச்சி டைம்ஸ் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார் ராய் லக்ஷ்மி. கேரள திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டியுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். உடல் எடையை குறைத்து லக்ஷ்மி ராய் என்ற பெயரை ராசிக்காக ராய் லக்ஷ்மி என்று மாற்றியுள்ளார்.

நித்யா மேனன்

2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகள் பட்டியலில் 5வது இடத்தில் பாவனாவும், 6வது இடத்தில் பிரியாமணியும், 7வது இடத்தில் நிக்கி கல்ராணியும், 8வது இடத்தில் நமிதா பிரமோதும், 9வது இடத்தில் கீர்த்தி சுரேஷும், 10வது இடத்தில் ரீனு மேத்யூஸும், 11வது இடத்தில் பார்வதி ஓமனக்குட்டனும், 12வது இடத்தில் பாமாவும், 13வது இடத்தில் நித்யா மேனனும், 14வது இடத்தில் ரம்யா நம்பீசனும் உள்ளனர்.

காவ்யா மாதவன்

மலையாள திரை உலகின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக உள்ள காவ்யா மாதவன் தான் கொச்சி டைம்ஸ் பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 15வது இடத்தில் உள்ளார். கணவரை விட்டுப் பிரிந்த காவ்யாவுக்கும், மனைவி மஞ்சு வாரியரை பிரிந்த மலையாள நடிகர் திலீப்புக்கும் இடையே காதல் என்று பல மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது.

English summary
Mumbai actress Isha Talwar has topped the Kochi times most desirable women in 2014 list.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos