»   »  ராதே மாவாக மல்லிகா மா?: இதில் யார் கூறுவது உண்மை என தெரியலையே

ராதே மாவாக மல்லிகா மா?: இதில் யார் கூறுவது உண்மை என தெரியலையே

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா பற்றிய படத்தில் தான் நடிக்கவில்லை என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் சர்ச்சையில் சிக்கியுள்ள பெண் சாமியார் ராதே மா. இந்நிலையில் ராதே மாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தியில் ஒரு படத்தை எடுக்க உள்ளனர் என்று செய்தி வெளியானது.

அந்த படத்தில் ராதே மாவாக கவர்ச்சிப்புயல் மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

மல்லிகா

மல்லிகா

ராதே மா வாழ்க்கையை மையமாக வைத்து ரஞ்சித் ஷர்மா ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தில் ராதே மாவாக மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளார் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இல்லை

உண்மை இல்லை!! உண்மை தெரியாமல் தயவு செய்து தவறான கதைகளை பரப்பாதீர்கள் என ராதோ மா படம் பற்றி மல்லிகா ஷெராவத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பெயர்

என் பெயரை பயன்படுத்தினால் செய்தியாகிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் மக்கள் அதை தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்று ட்வீட் செய்துள்ளார் மல்லிகா.

உண்மை?

உண்மை?

தயாரிப்பாளரோ மல்லிகா ஷெராவத் தான் ராதே மாவாக நடிக்கிறார் என்கிறார். ஆனால் மல்லிகாவோ நான் நடிக்கவில்லை என்கிறார். இதில் யார் கூறுவது உண்மை என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

English summary
Mallika Sherawat said that she is not acting in Radhe Maa biopic as the controversial God woman.
Please Wait while comments are loading...